தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் மு.க.ஸ்டாலின்... அமைச்சர் சேகர்பாபு புகழாரம்..!

Published : Sep 04, 2021, 01:38 PM IST
தமிழ்நாட்டின் நவீன ராமானுஜர் மு.க.ஸ்டாலின்... அமைச்சர் சேகர்பாபு புகழாரம்..!

சுருக்கம்

கலைஞர் சட்டமாக்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி நவீன ராமானுஜராக திகழ்கிறார்

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் சட்டத்தை கடந்த  2.10.70ல் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். எனினும் பல்வேறு சட்டப் வழக்குகள் காரணமாக இந்த சட்டத்தை அப்போது திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. பெரியாரின் ஆசையாக இந்த திட்டத்தை கருணாநிதி குறிப்பிட்டார். பெரியார் உயிரோடு இருக்கும்போது இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியவில்லை என்றும் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள் என்றும் இதனை கருணாநிதி எப்போதும் குறிப்பிடுவார். தற்போது 51 ஆண்டுகள் கழித்து பெரியாரின் கனவையும் கலைஞரின் சட்டத்தை நிறைவேற்றியுள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிலையில் இன்று சட்டசபையில் சேகர் பாபு, மு.க.ஸ்டாலினை நவீன ராமானுஜர் எனப் புகழந்துள்ளார். “அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது பெரியாரின் கனவு. அதை அண்ணா நிறைவேற்ற முயற்சித்தார், கலைஞர் சட்டமாக்கினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடைமுறைப்படுத்தி நவீன ராமானுஜராக திகழ்கிறார்” எனப் பாராட்டினார். 

PREV
click me!

Recommended Stories

அதிமுக கூட்டணியில் இணையும் விஜய்..? டெல்லி சமிக்ஞை..! இபிஎஸ் உற்சாகம்..!
விஜய்க்கு சப்போர்ட் பண்ண கையோடு தமிழகத்தில் கால் பதித்த ராகுல் காந்தி.. காங்கிரஸார் உற்சாகம்!