நீங்க தப்பு பண்றீங்கன்னு சொல்லல, ஆனா சரியா பண்ணுங்கன்னுதான் சொல்றோம்! கமலை கலாய்க்கும் தொண்டர்கள்

By sathish kFirst Published Sep 16, 2018, 3:14 PM IST
Highlights

’உங்க டயலாக்கெல்லாம் கேக்குறதுக்கு நல்லாதான் இருக்குது. ஆனால்  தண்ணியே இல்லாத குளத்துல மீன்பிடிக்க ஏலம் எடுத்து என்ன பிரயோசனம்?’ என்று ம.நீ.ம-வின் நிர்வாகிகள் புலம்பிக் கொட்ட துவங்கியுள்ளனர். 

’உங்க டயலாக்கெல்லாம் கேக்குறதுக்கு நல்லாதான் இருக்குது. ஆனால்  தண்ணியே இல்லாத குளத்துல மீன்பிடிக்க ஏலம் எடுத்து என்ன பிரயோசனம்?’ என்று ம.நீ.ம-வின் நிர்வாகிகள் புலம்பிக் கொட்ட துவங்கியுள்ளனர். 

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சுறுசுறுவென துவக்கப்பட்ட வேகத்தில் சுருண்டு படுத்துக் கொண்டது. கமல்ஹாசன் பிக்பாஸ் சீசன் -2 ஸ்டுடியோ ஓரமாக கரை ஒதுங்கிய பிறகு கட்சி ஹைபர்னேஷனுக்கு சென்றுவிட்டது. இதனால் தொடர்ந்து மிக கடுமையான விமர்சனத்தை சந்தித்து வந்தார் கமல். 

இதனால் திடீரென கேரவேனிலிருந்து இறங்கி மீண்டும் பிரச்சாரவேனுக்கு ஏறியிருக்கிறார் கமல். சமீபத்தில் ஒரு கல்லூரி விழா ஒன்றில் பேசியவர் “நான் இப்போ செய்றதை நாற்பது வருஷங்களுக்கு முன்னாடியே செஞ்சிருக்கணும். இதெல்லாம் நமக்கு  எதுக்கு?ன்னு முதல்ல பயந்தேன். ஆனா இனி அந்த பயம் வரவே வராது. அரசியலை தவிர இனி எனக்கு வேற வேலையே கிடையாது. மீதமிருக்கிற என் வாழ்நாட்கள், என்னை வாழ வைக்க மக்களுக்காகத்தான்.” என்று செம்ம ஆத்து ஆத்தியிருக்கிறார். 

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் வரவேற்புகள் கிடைத்தாலும் கூட, கமல் கட்சியின் நிர்வாகிகள் என்னவோ ‘என்னத்த...’ என்று கண்ணையா போல் இழுக்கின்றனர். 

ஏன் இந்த சோக ராகம்? என்று அவர்களிடம் கேட்டால், “எங்க தலைவர் நல்ல நோக்கத்தோடுதான் அரசியலுக்குள் நுழைந்திருக்கிறார், மாற்று அரசியல் செய்யணும்னு நினைக்கிறார். நாங்க சரியான நோக்கமுடைய மனிதரின் பின்னால்தான் நிற்கிறோம். அதெல்லாம் ஓ.கே.தான். 

ஆனால் பார்ட் டைமாக அரசியல் நடத்தினால் அது எந்த வகையில் சரிபட்டு வரும்? ரெண்டு மூணு அணிகளை ஆரம்பிச்சு நிர்வாகிகளை நியமிச்சுட்டு அப்புறம் ரெண்டு மூணு மாசம் அரசியலுக்கே லீவு விட்டுறார். மாவட்ட சுற்றுப்பயணம் உள்ளிட்ட எந்த பணியையும் நடத்துறதில்லை. விசிட்டுக்கு வர்றேன்னு தேதி கொடுத்த நிகழ்ச்சிகளை கூட சர்வசாதாரணமா  கேன்சல் பண்ணிடுறார். 

இவரை நம்பி புதிதாய் கட்சியில் நுழையும் யாருக்கும் எந்த நம்பிக்கையையும் கொடுக்க முடியுறதில்லை. ஒரு பொதுக்கூட்டம் கிடையாது, ஒரு ஆர்பாட்டம் கிடையாது. எந்த மாவட்டத்தின் எந்த தலைமை நிர்வாகியும் வெளியுலகத்துக்கு தெரியாது. ஸ்ரீபிரியா, பாரதிகிருஷ்ணகுமார், தங்கவேலு மாதிரியான வெகு சிலரை தவிர வேறு யாரையும் உலகத்துக்கு தெரியாது. 
எப்போ வருவார்? எப்படி வருவார்?ன்னு ரஜினி மட்டுமில்லை, எங்க தலைவர் கமலும்தான் பண்ணுறார். இவரை நம்பி எப்படி தீவிர அரசியல்ல இறங்குறது, இயங்குறது?” என்று நிறுத்தினர். 

நீங்க தப்பு பண்றீங்கன்னு சொல்லலை கமல், ஆனா சரியா பண்ணுங்கன்னுதான் சொல்றோம்!

click me!