இடைதேர்தலில் திமுகவுக்கே ஆதரவு - ஜவாஹிருல்லாஹ் அதிரடி அறிவிப்பு

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 01:13 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
இடைதேர்தலில் திமுகவுக்கே ஆதரவு - ஜவாஹிருல்லாஹ் அதிரடி அறிவிப்பு

சுருக்கம்

அடுத்த மாதம் 3 தொகுதிகளில் நடக்க உள்ள இடை தேர்தலில், திமுகவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக, மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு  அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாக குழு தீர்மானித்துள்ளது.

3 தொகுதிகளிலும் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய மக்கள் கட்சியினர் பிரச்சாரம் செய்வார்கள்.

ஆக்கபூர்வமான எதிர்கட்சியாக தமிழக சட்டமன்றத்தில் பணியாற்றும் திமுக மேலும் வலுச் சேர்க்கும் வகையில் இத்தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களித்து மாபெரும் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியன் யூனியன் முஸ்லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன், திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

PREV
click me!

Recommended Stories

Vijay vs Stalin: இடைத்தேர்தலை புறக்கணிக்கும் திமுக.! முன் வைத்த காலை பின் வைக்கிறதா?! மீண்டும் மேலே பறக்கும் விசில் கொடி.!
TN Assembly byelection Candidate: இடைத்தேர்தல் யுத்தம்.! விசில் சின்னத்தில் போட்டியிடும் அதிமுக முகங்கள்.! செக் மேட் யாருக்கு?