தொடங்கியது திமுக நேர்காணல் : அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்

Asianet News Tamil  
Published : Oct 22, 2016, 12:50 AM ISTUpdated : Sep 19, 2018, 03:11 AM IST
தொடங்கியது திமுக நேர்காணல் : அண்ணா அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்

சுருக்கம்

அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட தொகுதிகளுக்கு திமுக சார்பில் விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் தொடங்கியது.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்நிலையில் 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வேட்பாளர் தேர்வு தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் நேற்று கோபாலபுரம் இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.

இதில், அதிக வாக்குகளை பெறும் வகையில் வேட்பாளர்களை நிறுத்துவது, பிரச்சாரம் செய்வது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், 3 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து நேற்று மாலை வரை 30 பேர் மனு அளித்துள்ளனர். திமுக சார்பில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு ஸ்டாலின், அன்பழகன், துரைமுருகன், ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெற்று வருகிறது.

PREV
click me!

Recommended Stories

DMK NDA Alliance : பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!
TN Politics: வன்னியரசு எனும் நான்.! யார் இந்த திருமாவின் படைத்தளபதி?!