எம்.எல்.ஏக்கள் அதிரடி மீட்பு ? - உயரதிகாரிகள் விரைவு? 

 
Published : Feb 14, 2017, 12:17 AM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
எம்.எல்.ஏக்கள் அதிரடி மீட்பு ? - உயரதிகாரிகள் விரைவு? 

சுருக்கம்

நாளை காலை எம்.எல்.ஏக்களை மீட்க அரசு அதிரடி ஆக்‌ஷனில் இறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலிட உத்தரவின் பேரில் காலை 7 மணிக்கு கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் மீட்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


ஓபிஎஸ் , சசிகலா அணிகளாக அதிமுக பிளவுபட்டு கிடக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ளதாக ஓபிஎஸ் தரப்பும் கூறிவந்த நிலையில் கூவத்தூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்களின் பிடியில் எம்.எல்.ஏக்கள் சிறைவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அவர்கள் நிலை பற்றி அறிந்து சொல்ல சொல்லி கோர்ட் உத்தரவிட போலீஸ் டிஎஸ்பி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு அறிக்கையை தாக்கல் செய்தனர். எம்.எல்.ஏக்கள் தாங்கள் விரும்பித்தான் இருக்கிறோம் என்று தெரிவித்ததாக அறிக்கையில் கூறினாலும் மாவட்ட எஸ்பி சரியான தகவல் அளிக்கவில்லை என்பதை மதுரை தெற்கு எம்.எல்.ஏ தப்பித்து வந்து பேட்டி அளித்தது நிருபித்தது. 


இதையடுத்து வேகம் பெற்ற மேலிடம் மாவட்ட எஸ்பி முத்தரசியை எச்சரித்ததாக கூறப்படுகிறது. பின்னர் எஸ்பி முத்தரசியுடன் திருவண்ணாமலை எஸ்பி விஜயகுமாரையும் உடன் சென்று கூவத்தூரில் ஆய்வு செய்ய மேலிடம் உத்தரவிட்டது. 


ஆய்வின் முடிவை அடுத்து மேலிடத்திலிருந்து தற்போது கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும். அனைத்து போலீஸ் உயரதிகாரிகள் டிஐஜி , ஐஜி லெவலில் உள்ளவர்கள் கூவத்தூருக்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


சென்னையிலும் காலை 5 மணிக்கே ஆயுதப்படை மற்றும் சிறப்புகாவல்படை , சட்டம் ஒழுங்கு போலீசார் 10 ஆயிரம் பேர் கூடும்படி கமிஷனரிடமிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எந்த நிலைக்கும் போலீசார் தயாராக இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


இதேபோல் காலை 7 மணி அளவில் போலீஸ் உயர் அதிகாரிகள் டீம் அதிரடியாக கூவத்தூரில் நுழைய உள்ளதாகவும் அவர்கள் எம்.எல்.ஏக்களை வெளியேற்ற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.


அமைதியாக இது நடந்தால் பிரச்சனை இல்லை. அதையும் மீறி நடந்தால் அதற்கும் தயாராக இருக்கும் படி சென்னை , காஞ்சி, திருவண்ணாமலை மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளதாம். 


ஆகவே நாளை காலை கூவத்தூர் ஒரு பரபரப்பான காட்சியை எதிர்கொள்ள போகிறதாம்.
 

PREV
click me!

Recommended Stories

தேர்தல் செலவுக்கு மண் திருடும் மாஃபியாக்கள்..! ஸ்வீட்பாக்ஸில் கொழிக்கும் அதிகாரிகள்..!
TVK தான் பெஸ்ட் சாய்ஸ்.. கூட்டாக விஜய் பக்கம் சாய்ந்த பன்னீர்செல்வம் மா.செ.கள்