
ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக இருந்த பொது கூட இப்படி செய்யவில்லை. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, மீண்டும் முதல்வர் போட்டோக்களுடனான விளம்பரங்கள் அதிக அளவில் இடம் பிடித்துள்ளார். ஆமாம், ஜெயலலிதாவிற்கு நிகராக அதிமுகவினரால் அதிகமாக புகைப்படங்கள் வைக்கப்படுகிறது. எடப்பாடி போல ஒரு முதல்வர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு அதிமுகவினர் மத்தியில் அருமை பெருமைகளை அள்ளிவிட ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக செய்தித்துறை சார்பில் அரசு விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டு வந்தது. அதில், கோவிலில் ஒரு பெண்ணிடம் அர்ச்சகர் யார் பெயருக்கு அர்ச்சனை எனக் கேட்க, அப்பெண் எடப்பாடி சாமி பெயருக்கு என முதலமைச்சர் பழனிசாமியை குறிப்பிட்டு கூறுவார். இந்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது. பலரும் இந்த விளம்பரத்தை வைத்து மீம்ஸ் போட்டு வந்தனர். பலதரப்பினரின் கேலிக்கு உள்ளானதால், அந்த விளம்பரம் நிறுத்தப்பட்டது.
என்னதான், அந்த விளம்பரம் நிறுத்தினாலும் எடப்படியார் அதிமுகவினருக்கு தெய்வமாகத்தான் கட்சி தருகிறாராம். ஆமாம், கடந்த சில தினங்களுக்கு முன்பாக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளரும் செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ.வுமான தூசி மோகன் முதல்வரைச் சந்தித்திருக்கிறார். ‘நான் முதல்வரைச் சந்திக்க அவரது ஆபீசுக்குப் போனேன். பாதுகாப்பு அதிகாரிகள் என்னை உள்ளே விடல. ‘நான் தூசி மோகன் வந்திருக்கேன்னு சொல்லுங்கன்னு சொல்லி விட்டேன். அடுத்த நிமிஷம் என்னை உள்ளே வரச் சொல்லிட்டாரு.
அதுக்குப் அப்றமா ஒரு நாளு என் பேரன் கிஷோரை ஒருதடவை கூட்டிட்டுப் போனேன். உடனே உள்ளே கூப்பிட்டாங்க. என் பேரன் முதல்வரைப் பார்த்ததும், ஹாய் சொல்லிட்டு நீங்கதான் முதல்வரா என்று கேட்டான். அதுக்கு அவர் சிரிச்சுகிட்டே, ‘ஆமா தம்பி... இங்கே வா..’ என்று ஏன் பேரனை கூப்பிட்டு, பக்கத்தில் நிறுத்தி போட்டோ எடுக்கச் சொன்னாரு. அந்த அளவுக்கு எங்ககிட்ட உரிமையா பழகுறாரு... இதே ஸ்டாலின்கிட்ட இப்படி இருக்க முடியுமா? இல்ல... தினகரன்கிட்டதான் இப்படி பேச முடியுமா? அந்த அளவுக்கு அண்ணன் எளிமையாக இருக்காரு என அந்த சந்திப்பு பற்றி மோகனே தனக்கு நெருக்கமானவர்களிடம் எடபபாடியாரை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
அதுமட்டுமில்ல, அரசு விழாவுக்கு ஒருநாள் நான் பென்ஸ் காரில் போய் இறங்கினேன். அதைப் பார்த்து முதல்வர் சிரிச்சுகிட்டே, ‘கார் நல்லா இருக்கு’ன்னு சொல்லிட்டுப் போனாரு. இதே அந்த அம்மா இருந்தப்போ இப்படி பென்ஸ் காரில் யாராச்சும் அவங்க முன்னாடி போய் பென்ஸ் காரில் இறங்கிட முடியுமா? என்று எடப்பாடி பெருமைகளைப் பேசிவருகிறார்.
இவரைப்போலத்தான், ஒவ்வொரு எம்.எல்.ஏ.க்களுமே இப்படித் தங்களுக்கும் எடப்பாடிக்கும் இடையில் இருக்கும் நெருக்கத்தை வெளிப்படையாகவே பேசி வருகிறார்களாம்.