கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த அந்த 3 எம்.எல்.ஏக்கள்...!

Asianet News Tamil  
Published : Nov 16, 2017, 08:31 PM ISTUpdated : Sep 19, 2018, 01:27 AM IST
கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்த அந்த 3 எம்.எல்.ஏக்கள்...!

சுருக்கம்

MLAs Karunas Prasanna and Tamilam Ansari met Karunanidhi.

அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். 

கடந்த ஆண்டு உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். 

பின்னர் சற்று உடல்நலம் தேறிய கருணாநிதி வீட்டிலேயே சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார்.

இதனிடையே கடந்த ஓர் ஆண்டாக பொது நிகழ்ச்சிகள் எதிலும் பங்கேற்காத கருணாநிதி முதல் முறையாக முரசொலி அலுவலகம் வந்து கண்காட்சியை பார்வையிட்டார்.

அண்மையில், தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சென்று சந்தித்தார். இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அவரை தொடந்து எஸ்.வி.சேகர், சரத்குமார், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினரும் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர்.

அந்த வரிசையில் தற்போது அதிமுகவின் கூட்டணி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி ஆகியோர் கருணாநிதியை சந்தித்து நலம் விசாரித்தனர். 

PREV
click me!

Recommended Stories

தொகுதிப் பங்கீட்டில் இழுபறி..? கடந்த முறை 6, இம்முறை 10 சீட் கேட்கும் சிபிஎம்..?
மீண்டும் அதிமுகவில் இணைந்த ஓபிஎஸ் ஆதரவாளர்.. இபிஎஸ் பக்கம் சாய்ந்த வெல்லமண்டி நடராஜன்!