இளம்பெண்ணை பலாத்காரம் செய்து தாலி கட்டிய எம்.எல்.ஏ... ஆளும் கட்சியில் பரபரப்பு..!

Published : Jun 11, 2019, 06:13 PM ISTUpdated : Jun 11, 2019, 06:14 PM IST
இளம்பெண்ணை பலாத்காரம் செய்து  தாலி கட்டிய எம்.எல்.ஏ... ஆளும் கட்சியில் பரபரப்பு..!

சுருக்கம்

பலாத்காரத்தில் ஈடுபட்டதாக புகாரளித்த இளம்பெண்ணை 28 வயதான ஆளும் கட்சி எம்.எல்.ஏ திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

பலாத்காரத்தில் ஈடுபட்டதாக புகாரளித்த இளம்பெண்ணை 28 வயதான ஆளும் கட்சி எம்.எல்.ஏ திருமணம் செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

திரிபுரா மாநிலத்தில் பாஜக தலைமையில், திரிபுரா மக்கள் முன்னணி கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. திரிபுரா மக்கள் முன்னணி கட்சி ரைமா பள்ளத்தாக்கு தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் 28 வயதான தனஞ்ஜய். இவர் தன்னை திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்து விட்டார் என கடந்த 20ஆம் தேதி அகார்தலா மகளிர் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்த எம்எல்ஏ கைது நடவடிக்கைக்கு பயந்து தலைமறைவானார். முன்ஜாமீன் கோரி திரிபுரா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரது முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் இருதரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதான முடிவுக்கு வந்தனர். இந்நிலையில் புகார் செய்த பெண்ணை நேற்று முன்தினம் திருமணம் செய்துக்கொண்டார் தனஞ்செய்.

தற்போது மணப்பெண் தலாய் மாவட்டத்தில் உள்ள கண்டசெரா பகுதியில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், இன்று திருமணத்தை பதிவு செய்து அதற்கான ஆவணங்கள் பெறப்பட்டிருப்பதாகவும் அவரது உறவினர்கள் கூறினர். முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் வேறு வழியின்றி எம்எல்ஏ புகார் கூறிய பெண்ணை திருமணம் செய்ததாக சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்
 

PREV
click me!

Recommended Stories

ஓரங்கட்டப்பட்ட ஓடி ஓடி வேலை செய்த அஜிதா அஃனஸ்..! தவெகவில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் நிர்வாகி
41 பேரை கொன்று குவித்த நடிகர் விஜய் பின்னால் செல்வது ஏன்..? கிறிஸ்தவ மத முதல்வர் காட்வின் எதிர்ப்பு.. தவெக அதிர்ச்சி..!