
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பெண் எம்எல்ஏ ஒருவர் பெண் போலீஸ் ஒருவரை கன்னத்தில் அறைந்தார். பதிலுக்கு அந்த பெண் போலீசும் எம்எல்ஏவை திருப்பி கன்னத்தில் அறைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
இமாசலப் பிரதேசத்தில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததது. இது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.எல்.ஏ.க்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். இதனால் காங்கிரஸ் அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
அப்போது அங்கு தாமதமாக வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஆஷா குமாரி கூட்டம் நடக்கும் இடத்துக்குச் செல்ல முயற்சித்துள்ளார். அப்போது இவருக்கும். பெண் போலீஸ் ஒருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஆஷா குமாரி திடீரென அந்த போலீஸின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதையடுத்து அந்தப் பெண் போலீசும் எம்.எல்.ஏ. கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அருகிலிருந்த போலீசார் இருவரையும் தனித்தனியே அழைத்துச் சென்று சமாதானப்படுத்தினர்.
சிறிது நேரத்தில் ஆஷா குமாரி அந்த பெய் போலீசிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்ப. . தனக்கு அந்தப் பெண் போலீசின் அம்மா வயதாகிறது என்று கூறிய அவர், அந்தச் சமயத்தில் தான் நிதானத்தை இழந்துவிட்டதாகவும் , கூட்டத்தில் பெண் போலீஸ் தன்னை மாற்று வழியில் தள்ளியதாகவும் குற்றம்சாட்டினார்..
ஆஷா குமார் – பெண் போலீஸ் இடையே நடைபெற்ற இந்த மோதல் முதன் முதலில் ஏஎன்ஐ செய்தி நிறுவனம் மூலம் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.
எம்.எல்.ஏ. ஆஷா குமாரி முன்னாள் முதலமைச்சர் வீர்பத்ர சிங்கின் மருமகள் 2003 - 2005 காலகட்டத்தில் வீர்பத்ர சிங் முதலமைச்சராக இருந்தபோது ஆஷா குமாரி அமைச்சராகப் பதவி வகித்தார்.