
ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது இவங்களுக்கு இதே வேலையா போச்சு என்று பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் கோயில்களை திறக்க தடை விதிக்க கோரி வழக்கறிஞர் அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த உயர்நீதிமன்றம் நேற்று முன் தினம் தள்ளுபடி செய்து, வழக்கை தள்ளி வைத்தது.
இந்நிலையில், பாரதிய ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா, ஆங்கில புத்தாண்டுக்காக நள்ளிரவில் கோவில்களை திறக்க தடை விதிக்க வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டரில் பதிவில்; ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு என்றாலே இளைஞர்கள் மது அருந்தி வீதிகளில் கலாட்டா செய்வது சகஜமாகியுள்ளது. எனவே காவல்துறை இரவு 1 மணிக்கு மேல் யாரும் கொண்டாடத் கூடாது என்று அறிவித்துள்ளது. அதேபோல் நள்ளிரவில் கோவில்களை திறந்து வைத்திருப்பதும் ஆகம விதி மீறலாகும். எனவே அரசு அதை தடை செய்யவும் ட்விட்டரில் சுட்டிக்காட்டியுள்ளார்.