
கர்நாடக முதல்வராக எடியூரப்பா இன்று காலை பதவி ஏற்றுக்கொண்டார்.
பரபரப்பான அரசியல் சூழலில் 104 இடங்களை பிடித்த பாஜக ஆட்சியை பிடித்தது. அதே சமயத்தில் மஜத மற்றும் காங்கிரஸ் இரண்டு அணிகளும் கூட்டு சேர்ந்து மஜாரிட்டி வைத்துள்ளது.
மஜத - 38 இடங்களையும், காங்கிரஸ் 78 இடங்களையும் பெற்றது. சுயேச்சை - 2 என்ற நிலையில் உள்ளது.
இருந்த போதிலும் தனிபெரும்பான்மையாக பாஜக மட்டுமே 104 இடங்களை பிடித்து உள்ளது.
இதனை தொடர்ந்து காங்கிரஸ் மற்றும் மஜத இவரை இரண்டும் இணைந்து குமாரசாமி தலைமையில், தன்னை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் கடிதம் வழங்கினார்
அதே போன்று பாஜக சார்பில் எடியூரப்பா தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு ஆளுநரிடம் கடிதம் கொடுத்தார்
இதனை தொடர்ந்து எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். அதன்படி இன்று எடியூரப்பா முதல்வராகபதவியேற்றுள்ளார்.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எடியூரப்பா பதவியேற்பை கண்டித்து கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலை அருகே காங்கிரசார் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியில், அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்கின் வாடிக்கையாளர் உதவி மையத்திற்கான ட்விட்டர் கணக்கிற்கு ட்விட் ஒன்றை செய்துள்ளார்.
அதில், தனக்கு ஷாப்பிங் செய்வதில் சிக்கல் உள்ளதாக கூறியிருக்கிறார். அது என்ன பிரச்சனை என அமேசான் கேட்டுள்ளது. அதற்கு, மதச்சார்பற்ற ஜனதா தளக் கட்சியின் 7 எம்எல்ஏக்களை வாங்கி, அவர்களை பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவிற்கு பரிசளிக்க வேண்டும், ஏதாவது நல்ல டீல் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறி கிண்டல் செய்துள்ளார். தற்போது, அந்த ட்வீட் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதற்கு ஏற்றவாறு கார்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் எம் எல் ஏக்கள் ஒரு சிலர் மிஸ்ஸிங் என செய்திகள் வெளியாகின் உள்ளது. அவர்கள் அதில் இருவர் ராஜினமா செய்ய உள்ளதாக தகவல்வெளிவந்து உள்ளது