எங்க ஊரு 'எம்.எல்.ஏ.,வை காணோம்'... துண்டு பிரசுரம் அடித்து கொடுத்த பொதுமக்கள்! வேலூரில் பரபரப்பு...

Published : Oct 02, 2018, 12:21 PM IST
எங்க ஊரு 'எம்.எல்.ஏ.,வை காணோம்'... துண்டு பிரசுரம்  அடித்து கொடுத்த பொதுமக்கள்! வேலூரில் பரபரப்பு...

சுருக்கம்

வேலுார்,  கே.வி., குப்பம் தனித் தொகுதியில் 'அதிமுக. எம்.எல்.ஏ.,வை காணவில்லை' என்ற துண்டு பிரசுரத்தை, கே.வி.குப்பம் தொகுதி மக்கள் வினியோகித்தனர்.

வேலுார்,  கே.வி., குப்பம் தனித் தொகுதியில் 'அதிமுக. எம்.எல்.ஏ.,வை காணவில்லை' என்ற துண்டு பிரசுரத்தை, கே.வி.குப்பம் தொகுதி மக்கள் வினியோகித்தனர்.

வேலுார் மாவட்டம், கே.வி., குப்பம் தனித் தொகுதியில், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த லோகநாதன், எம்.எல்.ஏ.,வாக உள்ளார். மக்கள் ஆத்திரம் இவர், எம்.எல்.ஏ., ஆன பின், ஓராண்டு மட்டும், சொந்த ஊரான, லத்தேரியில் வசித்து வந்தார். அவரிடம், மக்கள் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.

பின், காட்பாடி காந்தி நகரில், ஆடம்பர பங்களா கட்டி, அங்கு குடியேறினார். தொகுதியில் நடக்கும் அரசு விழாவில் மட்டும் பங்கேற்க வரும் அவர், மக்களை சந்திப்பதில்லை. ஆத்திரமடைந்த மக்கள், 'எம்.எல்.ஏ.,வை காணவில்லை' என்ற துண்டு பிரசுரத்தை,  நேற்று வினியோகித்தனர்.

கண்ணீர் அஞ்சலி துண்டு பிரசூரத்தில்: கே.வி.குப்பம், லோகநாதன் எம்.எல்.ஏ.,வை காணவில்லை. எங்கே லோகநாதன், தொகுதி மக்கள் அவதி. தொகுதி பக்கம் வரல... அலுவலகம் பூட்டு, அங்கே போனால் வேட்டு... ஆளும் கட்சிக்கே அல்வா.பாலாற்றில் மணல் கொள்ளை, ஓட்டு போட்ட மக்களுக்கே வேட்டு வைத்த, எம்.எல்.ஏ., கண்ணீர் அஞ்சலி கவலை, தமிழா திருந்து, நல்லாட்சியை அமைத்திடு இங்ஙனம், கே.வி.குப்பம் தொகுதி மக்கள் என இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..