பரப்பன அக்ரஹாராவுக்கு படையெடுத்த தீவிர விசுவாசிகள்... சிறையில் சசிகலாவுடன் சந்திப்பு...

Asianet News Tamil  
Published : May 20, 2017, 08:43 PM ISTUpdated : Sep 19, 2018, 12:38 AM IST
பரப்பன அக்ரஹாராவுக்கு படையெடுத்த தீவிர விசுவாசிகள்...    சிறையில் சசிகலாவுடன் சந்திப்பு...

சுருக்கம்

MLA Karunas Meet Sasikala At bengaluru jail

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

பெங்களூரு சிறையில்  சசிகலாவுடன் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டி உள்ளிட்டோர் சந்தித்துள்ளனர் என தகவல் அதிமுக இரண்டாக பிளவு பட்டதில் சசிகலா அணியில் ஐக்கியமான எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கருணாஸ் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளும் சசிகலாவை சந்தித்து பேசியுள்ளனர்.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் சிறை தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ளார். தற்போது அ.தி.மு.க. அம்மா அணி என்றும், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் இரண்டாக பிளவுபட்டு கிடக்கிறது.

இதில் சசிகலா அணியில் ஐக்கியமாகியுள்ள எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கருணாஸ் முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாளும் இன்று மாலை சசிகலாவை சந்தித்து பேசியுள்ளார் சுமார் ஒருமணி நேரத்திற்கு பிறகு  சிறையை விட்டு வெளியே வந்துள்னர்.

மேலும், அ.தி.மு.க.வை காப்பாற்றவும் இரட்டை இலை சின்னத்தை மீட்கவும், சசிகலா குடும்பத்தினரை ஓரங்கட்டிவிட்டு ஓ.பி.எஸ். அணியினரும், எடப்பாடி அணியினரும் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதால், சசிகலா குடும்பத்திற்கு தீவிர விசுவாசியான எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்ச்செல்வன், கருணாஸ், முன்னாள் அமைச்சர் ரமணா, முன்னாள் எம்.எல்.ஏ. மொளச்சூர் பெருமாள் சசிகலாவை ஜெயிலில் சந்தித்து பேசியுள்ளது அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

6 மணி நேரம் விஜய்யை திணறடித்த சிபிஐ.. தளபதியை தண்ணி குடிக்க வைத்த 'அந்த' கேள்வி.. நடந்தது என்ன?
தேர்தல் நடத்தை விதிகள் அமல்.. என்ன செய்யணும்? என்ன செய்யக்கூடாது? முழு விபரம் இதோ!