தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் - அடுக்கடுக்காய் ஆதரவு தரும் எம்எல்ஏக்கள்…

 
Published : Jun 07, 2017, 10:49 AM ISTUpdated : Sep 19, 2018, 12:43 AM IST
தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார் திருப்பரங்குன்றம் ஏ.கே.போஸ் - அடுக்கடுக்காய் ஆதரவு தரும் எம்எல்ஏக்கள்…

சுருக்கம்

MLA a.k bose meet dinakaran to support him - more supported from MLAs

திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் இன்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
இரண்டு பிரிவுகளாக செயல்பட்ட அதிமுக, தற்போது மூன்றாக உடைந்தது. டி.டி.வி.தினகரனை கட்சியில் இருந்து ஒதுக்கி வைத்துள்ளதாக எடப்பாடி தலைமையிலான  அமைச்சரவை முடிவு செய்து அறிவித்தது.


இதையடுத்து தினகரன் தலைமையில் புதிய அணி உருவாகியுள்ளது. டி.டி.வி.தினகரனை அதிமுக எம்எல்ஏக்கள் தொடர்ந்து சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

நேற்று வெற்றிவேல், கதிர்காமு, செந்தில் பாலாஜி உள்ளிட்ட 26 எம்எல்ஏக்கள் சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.
இந்நிலையில் அடையாறில் உள்ள தினகரனின் இல்லத்துக்க வந்த திருப்பரங்குன்றம் தொகுதி எம்எல்ஏ ஏ.கே.போஸ் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.


தொடர்ந்து உசிலம்பட்டி எம்எல்ஏ உள்ளிட்ட 50 எம்எல்ஏக்கள் இன்று டி.டி.வி.தினகரனை சந்திக்க உள்ளதாக தங்க தமிழ்செல்வன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அடுக்கடுக்காக எம்எல்ஏக்கள் தினகரனை சந்தித்து வருவது எடப்பாடி அணியினரை அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 

PREV
click me!

Recommended Stories

விஜய் வாக்குகளால் கதிகலங்கும் திமுக..! கடைசியில் கனிமொழியை நம்பி இருக்கும் மு.க.ஸ்டாலின்..!
பணத்தை பெரிதாக நினைக்காமல் தியாக வாழ்க்கை வாழும் ஸ்டாலின்- உதயநிதி..! நெஞ்சு புடைக்க புகழும் கருணாஸ்..!