
ரஜினிகாந்துக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக திகழும் ரஜினிகாந்த், இன்று தன்னுடைய 67வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுதும் உள்ள ரஜினி ரசிகர்கள் ரஜினியின் பிறந்தநாளை கொண்டாடிவருகின்றனர்.
இதுவரை இல்லாத அளவிற்கு ரஜினிக்கு இந்த பிறந்தநாள் சற்று சிறப்பு வாய்ந்தது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த பேச்சு சற்று ஓங்கி ஒலிக்க தொடங்கியுள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ரஜினியின் பிறந்தநாளை வழக்கம்போல அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடிவருகின்றனர். ரஜினிக்கு சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr"><a href="https://twitter.com/hashtag/HBDSuperStarRajinikanth?src=hash&ref_src=twsrc%5Etfw">#HBDSuperStarRajinikanth</a> I, very sincerely, wish you a long, contented, happy and healthy life. <a href="https://twitter.com/superstarrajini?ref_src=twsrc%5Etfw">@superstarrajini</a></p>— M.K.Stalin (@mkstalin) <a href="https://twitter.com/mkstalin/status/940436823519588352?ref_src=twsrc%5Etfw">December 12, 2017</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
அந்த டுவிட்டர் பதிவில், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். நீங்கள் நீண்ட நெடும் காலத்திற்கு மனநிறைவுடனும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ எனது வாழ்த்துக்கள் என ஸ்டாலின் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.