ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது நாகரிகமானது - திருநாவுக்கரசர் பேட்டி

First Published Dec 18, 2016, 1:53 PM IST
Highlights


ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது நாகரிகமானது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

சென்னை காவேரி மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைச் சந்திக்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது திரண்டு இருந்த ஏராளமான திமுக தொண்டர்கள், அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வைகோ கார் மீது கற்கள் மற்றும் செருப்புகள் வீசப்பட்டன.

இதையடுத்து கருணாநிதியை பார்க்காமல் வைகோ திரும்பிச் சென்றார். இதற்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வருத்தம் தெரிவித்துள்ளார். தொண்டர்களின் நடவடிக்கைக்காக திமுக வருத்தம் தெரிவிப்பதாக செய்தித் தொடர்பாளர் டி.கே.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர், “இந்த சம்பவத்துக்கு ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தது வரவேற்கத்தக்கது. நாகரிமானது. எனினும் கருணாநிதியை சந்திக்க திமுகவினர் வைகோவை அனுமதித்திருக்கலாம் என்றார்.

மேலும் இரு கட்சியினரும் பிரச்சனையை இத்துடன் விட்டுவிட வேண்டும் என்பதே காங்கிரசின் விருப்பம் என்றும் அவர் கூறினார்.

click me!