அதிமுக பொதுசெயலாளராக சின்னம்மா பொறுபேற்க வேண்டும் - ஜெயலலிதா பேரவை அதிரடி

 
Published : Dec 18, 2016, 01:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:48 AM IST
அதிமுக பொதுசெயலாளராக சின்னம்மா பொறுபேற்க வேண்டும் - ஜெயலலிதா பேரவை அதிரடி

சுருக்கம்

அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டி, தமிழகம் முழுவதும் அம்மா பேரவை சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல்களுடன், சென்னை மெரினாவில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெ.வின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. 

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பொறுப்பை சசிகலா ஏற்க வலியுறுத்தி, கழகத்தின் பல்வேறு அமைப்புகள் சார்பில், ஏற்கெனவே தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், கழகப் பொதுச் செயலாளராகவும், முதலமைச்சராகவும் சசிகலா பொறுப்பேற்க வேண்டி, தமிழகம் முழுவதும் அம்மா பேரவை சார்பில் நடைபெற்ற ஆலோசனைக்‍ கூட்டங்களில் ஒருமனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த தீர்மான நகல்களுடன், அம்மா பேரவைச் செயலாளரும், அமைச்சருமான  R.B. உதயகுமார் தலைமையில், 50 மாவட்டங்களைச் சேர்ந்த அம்மா பேரவை நிர்வாகிகள், சென்னை மெரினா கடற்கரையில் உள்ள மறைந்த  முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினர்.

அங்கு செய்தியாளர்களுக்‍கு பேட்டியளித்த  R.B. உதயகுமார், கழக பொதுச் செயலாளராகவும், ஆர்.கே. நகர் தொகுதியில் போட்டியிட்டு முதலமைச்சராகவும் சின்னம்மா பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

PREV
click me!

Recommended Stories

விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!
‘டோ ஷூட் நடத்தும் முதல்வரை வீட்டுக்கு அனுப்புவோம்…’ எம்.ஜி.ஆர் சமாதியில் இபிஎஸ் சபதம்