கைதிகள் விடுதலைப் பற்றி பேரவையில் தெரிவிக்காமல் அறிக்கை வெளியிட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி

Asianet News Tamil  
Published : Jun 04, 2018, 12:31 PM ISTUpdated : Sep 19, 2018, 02:29 AM IST
கைதிகள் விடுதலைப் பற்றி பேரவையில் தெரிவிக்காமல் அறிக்கை வெளியிட்டது ஏன்? ஸ்டாலின் கேள்வி

சுருக்கம்

M.K.Stalin question in the Assembly

பத்து ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்த ஆயுள் கைதிகள் விடுதலை பற்றி சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன் என்றும், அறிக்கையாக மட்டும் அரசு வெளியிட்டது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் ஏற்டு செய்யப்பட்டது. இந்த நிலையில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய சட்டப்பேரவைக் கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கைதிகள் விடுதலை பற்றி சட்டப்பேரவையில் தெரிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுப்பினார். கைதிகள் விடுதலைப் பற்றி சட்டப்பேரவையில் தெரிவிக்காமல் அறிக்கையாக அரசு வெளியிட்டது ஏன் என்றும் மு.க.ஸ்டாலின் கேடார்.

PREV
click me!

Recommended Stories

'என்னை வெறி ஏத்தி விட்றாத'.. மீண்டும் செய்தியாளரிடம் சீறிய சீமான்! என்ன நடந்தது?
மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த புரட்சிக் கலைஞர்.. கேப்டன் விஜயகாந்துக்கு புகழாரம் சூட்டிய விஜய்!