ஸ்டாலின் திட்டமிடாததே வெள்ளத்திற்கு காரணம்… எடப்பாடி கூறும் அடுக்கடுக்கான புகார்கள்!! | ChennaiFlood

By Narendran SFirst Published Nov 12, 2021, 6:14 PM IST
Highlights

#ChennaiFlood | ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தும் கூட  அவருக்கு எவ்வாறு இதுபோன்ற மழை நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்தும் கூட  அவருக்கு எவ்வாறு இதுபோன்ற மழை நேரத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னையில் பலத்த மழை பெய்தது. இதனால் நகரின் பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நின்றுதோடு வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் மக்கள் முதல் தளத்தில் சிக்கி தவித்து வரும் நிலையில் அவர்களை அதிகாரிகள் படகுகள் மூலம் மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும் வெள்ள நீட் இராட்சத மோட்டர்கள் மூலம் அகற்றப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னையில் மழை பாதித்த பகுதியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இன்று மூன்றாம் நாளாக வெள்ள பாதிப்பு பகுதிகளைப் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

சென்னை சோழிங்கநல்லூர் தொகுதியில் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு மக்களின் குறைகளை கேட்டறிந்து நிவாரண உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் 523 குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதாகவும் அதனை அகற்றுவதற்கு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.  மேலும் தங்கள் மீது பழி சுமத்த வேறு காரணம் கிடைக்காமல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு விசாரணைக் கமிஷன் என்று முதலமைச்சர் கூறுகிறார் என்பதை சுட்டிகாட்டிய அவர், தமிழ்நாட்டில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் சிறப்பாக செயல்பட்டது என்று மத்திய அரசால் விருது வழங்கப்பட்டது என்றும் தமிழ்நாடு அரசின்  நகராட்சி நிர்வாகத்துறை மட்டும் 140 விருதுகளை பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டார். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 100க்கும் மேற்பட்ட பொறியாளர்களை தமிழக அரசு இடமாற்றம் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தற்போது அனுபவம் இல்லாத புதிய பொறியாளர்களை நியமித்ததால் அவர்களுக்கு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் எங்கு வெள்ளநீர் சூழ்ந்துள்ளது, அதனை எப்படி வெளியேற்ற வேண்டும் என்பது தெரியவில்லை என்றும் கடுமையாக மக்கள் பாதித்து உள்ள நிலையில், உடனடியாக அவர்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நியாய விலை கடைகள் மூலம் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் சென்னை மேயராகவும், துணை முதலமைச்சராகவும் இருந்து உள்ளார் என்றும் ஆனால் அவருக்கு எவ்வாறு இந்த நேரத்தில் செயல்பட வேண்டும் என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார். திறமையான அரசாங்கம் இல்லை என குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, அதனை மறைக்கத் தான் அதிமுக அரசை அவர்கள் குறை கூறி வருகிறார் என்றும் ஸ்டாலின் முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படவில்லை என்றும் தெரிவித்ததோடு அதனால் தான் வெள்ளத்திற்குக் காரணம் என்றும் குற்றம்சாடினார்.

click me!