திமுக பணத்தை வட்டிக்கு விடலாமா? ஸ்டாலின் தரப்பை அல்லு தெறிக்கவிட்ட அழகிரி!

By sathish kFirst Published Aug 14, 2018, 5:55 PM IST
Highlights

கட்சியின்  பணத்தை வட்டிக்கு விட்டும் சம்பாதிக்கும் கேவலம் நடக்கிறது என அழகிரி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

கட்சியின் சொத்தையும் மொத்தமாக் சுருட்ட திட்டம் போட்டுள்ளார் எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்,  கட்சியின் சொத்தை முழுமையாக சிதைக்க முயற்சிப்பதாக கிரந்கமாக கூறுகிறார். 

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் ஒரு வார துக்கம் அனுசரிப்புக்கு முன்பே மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் மகன் மு.க.அழகிரி திங்கள்கிழமை போர்க்கொடி உயர்த்தினார். சென்னை மெரினாவில் உள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்தில் அழகிரி, குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் எனது தந்தையிடம் எனது ஆதங்கத்தை தெரிவித்துக்கொண்டேன் என்றார். அது என்ன ஆதங்கம் என்பது இப்போது உங்களுக்கு தெரியாது. அதை காலம் பதில் சொல்லும் என்றார். 

மேலும் எனது ஆதங்கம் கட்சி தொடர்பானது. குடும்பம் தொடர்பானது அல்ல. அனைத்திற்கும் காலம் பின்னால் பதில் சொல்லும் என்று சூசுமாக பதிலளித்துள்ளது திமுக அரசியல் வட்டாரத்தி்ல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நான் தற்போது திமுகவில் இல்லை. அதனால் நாளை நடைபெற போகும் செயற்குழு பற்றி எனக்கு தெரியாது. மீண்டும் திமுகவில் இணைவது பற்றி எனக்கு தெரியாது என்றார்.  கருணாநிதியின் உண்மையான விசுவாசமான உடன்பிறப்புகள் என் பக்கம் தான் உள்ளனர் என்று கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் மீண்டும் இணைந்து செயல்படுவீர்களா என்ற நிரூபர்கள் கேள்விக்கு திமுகவில் மீண்டும் இணைவது குறித்து எனக்கு தெரியாது என்று அழகிரி பதிலளித்தார்.


இதனையடுத்து ஆங்கில  நாளிதழுக்கு பேட்டியளித்த அழகிரி பல ஷாக் தகவல்களை கூறினார். அதில்,  “திமுகவின் சொத்துகள் மற்றும் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன. கட்சி நிதியை வட்டிக்கு  விட்டு சம்பாதிக்கிறார்கள் என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவை பெறுத்தவரை ஏராளமான சொத்துகளும், பணமும் இருக்கிறது ஆனால் அதை தவறாக துஸ்பிரியோகம் செய்யப்படுவதாக கூறியுள்ளார், அவர்கள் எந்த அளவுக்குப் ய்கேவலமாக போய்விட்டார்கள் என்றால், கட்சிப்பனத்தை வட்டிக்கு விடும் அளவிற்கு  இதனால் வரும் லாபம் கட்சிக்குச் சென்று பார்த்தால் அதுவும் சரியாக வந்து சேருவதில்லை. 

அதனால் யார் லாபம் அடைகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரியும். நான் இப்போது கட்சிக்குள் இருந்தால், இதனையெல்லாம் தடுத்திருப்பேன். அதனால் தான் என்னை மீண்டும் கட்சிக்குள் சேர்க்கத் தயங்குகின்றனர். கட்சியின் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” எனக் கூறினார்.

மேலும், கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு தான் ஆசைப்படவில்லை எனவும், தொண்டனாக தன் தந்தையைப் போல் கட்சியை வலுப்படுத்துவதே தனது எண்ணம் என அழகிரி சொல்லியிருந்தார். கட்சியின் சொத்தையும் மொத்தமாக் சுருட்ட திட்டம் போட்டுள்ளார் எனக் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர்,  கட்சியின் சொத்தை முழுமையாக சிதைக்க முயற்சிப்பதாக கிரந்கமாக கூறுகிறார்.    கட்சியின் செயல்தலைவராக இருக்கும் செயலாளராக இருக்கும்  ஸ்டாலின் தான் கட்சியின் பொருளாளர். அதனால் தான் ஸ்டாலினை நேரடியாக  அட்டாக் பண்ணத் தொடங்கியிருக்கிறார்.

click me!