நம்மள கழட்டி விட்டவங்கள ரிவீட் அடிக்கணும்!! ரகசிய டீல் போட்டு தினகரனுடன் கைகோர்த்த அழகிரி!

By sathish kFirst Published Sep 15, 2018, 11:25 AM IST
Highlights

எப்படியாவது மீண்டும் திமுகவினுள் நுழைந்திட வேண்டும் என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளான, இரங்கல் பேரணி, ஊடகங்களுக்கு கொடுத்த காரசார பேட்டி என எதுவுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில், தற்போது தன்னை தானே தனித்து நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அழகிரி. 
 

கலைஞரின் மறைவிற்கு பிறகு அழகிரி எடுத்த அதிரடி நடவடிக்கைகள் எதுவும் அவர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறலாம். எப்படியாவது மீண்டும் திமுகவினுள் நுழைந்திட வேண்டும் என அவர் மேற்கொண்ட நடவடிக்கைகளான, இரங்கல் பேரணி, ஊடகங்களுக்கு கொடுத்த காரசார பேட்டி என எதுவுமே அவருக்கு கை கொடுக்காத நிலையில், தற்போது தன்னை தானே தனித்து நிரூபித்து காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் அழகிரி. 

அழகிரிக்கு என ஒரு பவர் இருக்கிறது என்பதை அவர் திமுகவிற்கு காட்ட அவர் கையில் எடுத்திருக்கும் ஆயுதம் தான், திருவாரூர் தொகுதி. இந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் அவர் பெறப்போகும் வெற்றி மூலம் , இது வரை தன்னை அலட்சியம் செய்து கொண்டிருக்கும் திமுகவிற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்திருக்கிறார் அழகிரி. கலைஞரின் தொகுதியான இந்த திருவாரூர் தொகுதி அழகிரிக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ, அதே அளவிற்கு ஸ்டாலினுக்கும் முக்கியமானது தான். 

திமுக தலைவராக ஸ்டாலின் பதவி ஏற்ற பிறகு அவர் சந்திக்கவிருக்கும் முதல் தேர்தல் இது. அதிலும் கலைஞரின் தொகுதி. இதனால் இங்கு திமுக தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின்.

ஆனால் ஸ்டாலினின் இந்த உறுதியை சோதித்து பார்க்க களமிறங்கி இருக்கிறார் அழகிரி. அழகிரி எப்படி திமுகவிற்கு எதிராக கிளம்பி இருக்கிறாரோ, அதே போல அதிமுகவிற்கு எதிராக நின்று தனது வெற்றியை நிரூபித்தவர் தான் தினகரன். வெவ்வேறு பாதையில் போய்க்கொண்டிருந்தாலும் இவர்கள் இருவரின் நோக்கமும் ஒன்று தான். வரப்போகும் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பது தான் அது.

இதில் அழகிரி திருவாரூர் தொகுதியை குறிவைத்திருப்பது போல, தினகரன் குறிவைத்திருப்பது திருப்பரங்குன்றம் தொகுதியை. இதனால் இந்த இருவருமே அரசியல் திரைக்கு பின்னால் தற்போது கைகோர்த்திருக்கின்றனர். அதன் படி அழகிரி திருவாரூரில் வெற்றி பெற தினகரன் உதவினால், திருப்பரங்குன்றம் தொகுதியில் தினகரனுக்கு உதவ தான் தயார் என கரம் நீட்டி இருக்கிறார் அழகிரி. இந்த டீல் பிடித்து போகவும் தினகரனும் இதற்கு சம்மதம் தெரிவித்திருப்பதாக சொல்லப்படுகிறது.

ஏற்கனவே திருவாரூர் தொகுதியில் அழகிரி வெற்றி பெருவதற்கான வாய்ப்பு 45 சதவீதமாக இருக்கிறது. சாதி ரீதியான ஓட்டு என்று பார்க்கும் போது, திருவாரூரில் பெரும்பான்மையான மக்களின் ஓட்டு  அழகிரிக்கு கிடைப்பதற்கு வாய்ப்பு அதிகம் இருக்கிறது. அங்கு பெரும்பான்மையான மக்கள் அழகிரியின் மனைவியின் இனத்தை சார்ந்தவர்கள் என்பதே இதற்கு காரணம். 

மேலும் அழகிரி நட்சத்திர வேட்பாளர் என்பதனாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு அங்கு அதிகம் தான். 
இப்போது தினகரனும் அழகிரிக்கும் மறைமுகமாக உதவினால் திருவாரூரில் அழகிரி தான் ஜெயிப்பார் என்று உறுதியாக சொல்லிவிடலாம். இது ஒரு பக்கம் இருக்க அழகிரியின் மகன் தயாநிதி அழகிரியும் , இந்த தேர்தலில் அப்பா தான் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டுவருகிறார். 

எனவே தான் அழகிரியின் வெற்றி வாய்ப்பு குறித்து ரகசிய கருத்துகணிப்பு நடத்தி இருக்கிறார் தயாநிதி அழகிரி. அந்த கருத்து கணிப்பின் அடிப்படையில் தான் , தினகரனுடன் கை கோர்த்தால் வெற்றி நிச்சயம் என முடிவு ம் செய்திருக்கிறார். இதனால் திருவாரூர் தொகுதி தேர்தல் முடிவு எப்படி இருக்க போகிறது? என்பதில் மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்பு இப்போது அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.

click me!