’ஜெயலலிதா செய்தது மறந்து போச்சா..?’ ராமதாஸை அதிர வைக்கும் மு.க.ஸ்டாலின்..!

Published : Apr 01, 2019, 04:17 PM IST
’ஜெயலலிதா செய்தது மறந்து போச்சா..?’  ராமதாஸை அதிர வைக்கும் மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

 ’வன்னியர்களின் 87 சொத்துக்களை காப்பாற்றியவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய நலனுக்காக டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்யவில்லை’’ என திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் வெளிப்படையாக பேசியுள்ளார்.   

’வன்னியர்களின் 87 சொத்துக்களை காப்பாற்றியவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய நலனுக்காக டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்யவில்லை’’ என திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் வெளிப்படையாக பேசியுள்ளார். 

அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சோளிங்கரில் திமுக தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,’’ தமிழ்நாட்டுக்கு கலைஞர் உதவும் கரமாக இருந்தார்; ஆனால் எடப்பாடி உதவாத கரமாக இருக்கிறார். 18 தொகுதி இடைத்தேர்தலில் திமுகவை வெற்றி பெறச்செய்ய வேண்டும். அதிமுக பாமக இடையே ஏற்பட்டுள்ள கூட்டணி கொள்கையற்ற கூட்டணி, பேரத்தின் அடிப்படையில் தேர்தல் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. 

பாமகவினர் பேருந்துகளை கொளுத்துவது, பாலங்களை தகர்ப்பதுதான் அவர்களின் வேலை. பாமக வன்முறை கட்சி என்று சட்டசபையில் ஜெயலலிதா கூறியுள்ளார். பாமகவினரை விமர்சித்து ஜெயலலிதா சட்டசபையில் கூறியுள்ள கருத்துகள் அவைக்குறிப்பில் இருக்கிறது. வன்னியர்களின் 87 சொத்துக்களை காப்பாற்றியவர் கருணாநிதி. வன்னியர் சமுதாய நலனுக்காக டாக்டர் ராமதாஸ் எதுவும் செய்யவில்லை. 

பல்வேறு இடங்களில் உள்ள வன்னியர் அறக்கட்டளையின் சொத்துக்களை தமது துணைவியார் பெயரில் பாமக நிறுவனர் ராமதாஸ் எழுதி வைத்துள்ளார். தேர்தல் நேரத்தில் துரைமுருகன் மகன் வீட்டில் சோதனை நடத்துகிறார்கள். திமுக பிரசாரத்தை தடுக்கவே எங்கள் கட்சி நிர்வாகிகள் வீட்டில் வருமான வரித் துறை சோதனை நடத்தப்படுகிறது. மிசா, பொடா சட்டங்களையே பார்த்தவர்கள் நாங்கள். இதற்கெல்லாம் திமுக அஞ்சாது’’ என அவர் தெரிவித்தார்

PREV
click me!

Recommended Stories

GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!
சட்டமானது 'வி.பி. ஜி ராம் ஜி' மசோதா! எதிர்ப்புகளை மீறி ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்!