’கோயிலைத்தான் பிடிக்காது... ஆனால், சாமியை பிடிக்கும்...’ பல்டியடித்த மு.க.ஸ்டாலின்..!

Published : Apr 01, 2019, 04:02 PM IST
’கோயிலைத்தான் பிடிக்காது... ஆனால், சாமியை பிடிக்கும்...’ பல்டியடித்த மு.க.ஸ்டாலின்..!

சுருக்கம்

’நான் இந்துக்களுக்கு எதிரி என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அது தவறு’ என திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் வெளிப்படையாக பேசியுள்ளார். 

’நான் இந்துக்களுக்கு எதிரி என்று தவறாக பிரசாரம் செய்கிறார்கள். அது தவறு’ என திமுக தலைவர் ஸ்டாலின் திடீர் வெளிப்படையாக
பேசியுள்ளார். 

அரக்கோணம் தொகுதியில் திமுக சார்பில் ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சோளிங்கரில் திமுக தலைவர்  ஸ்டாலின் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ‘’ஒன்றே குலம். ஒருவனே தேவன் என அண்ணா கூறியுள்ளார். நாங்கள் ஆண்டவனுக்கு எதிராக நின்றவர்கள் இல்லை. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. அப்படி பொய் பிரசாரம் செய்கிறார்கள். இந்து மதம் மட்டுமல்ல. எந்த மதத்திற்கும் நாங்கள் எதிரி அல்ல. என் மனைவி கோயிலுக்கு செல்வதை நான் தடுத்ததில்லை.


கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதுதான் திமுகவின்
கொள்கை’’என்று அவர் தெரிவித்தார். நாத்திக கட்சியாக தங்களை நிலைநிறுத்திக் கொண்டு வந்த திமுக, கோயில்களையும், இந்து மதத்தினரையும் மட்டுமே இழிவு செய்து வந்தது. ஆனால், மசூதிகளில் போய் தொப்பி அணிந்து நோன்பு கஞ்சி குடிப்பது, தேவாலயங்களில் சென்று பாதிரியார்களின் விழாக்களை சிறப்பிப்பது என தங்களை மதச்சார்பின்மைவாதியாக காட்டிக் கொள்வது என்கிற கொள்கைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தது.

 

இப்போது மெல்ல பல்டியடிக்கத் தொடங்கி இருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ரகசிய வழிபாட்டை அவர் நடத்தியதாகக் கூறப்பட்டது. யானையிடம் ஆசிர்வாதம் பெறும் அவரது புகைப்படங்களும் வெளியாயின. அதே போல் அவர், வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன் சகுணம் பார்த்தே வீட்டை விட்டுக் கிளம்பினார். பின்னர் கோபாலபுரம் சென்ற அவர் கருணாநிதியின் புகைப்படத்தின் முன் அந்த பட்டியலை வைத்து வணங்கினார். அடுத்து ராஜாத்தி அம்மாள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து ஆசிர்வாதம் பெற்றார். 

அடுத்து தனது தாயார் தயாளு அம்மாளின் காலில் விழுந்து வணங்கி விட்டு கருணாநிதி நினைவிடம் சென்ற அவர் வேட்பாளர்  பட்டியலை  சமாதியில் வைத்து தரையில் விழுந்து வணங்கிய பிறகே அறிவாலயம் திரும்பி வேட்பாளர்களை அறிவித்தார். தேர்தல் நெருங்கும் நிலையில் இப்போது நாங்கள் இந்துகளுக்கு எதிரானவர்கள் அல்ல. எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல’’ என அவர் வெளிப்படையாக பேச ஆரம்பித்துள்ளார்.  

 

ஆனால் அடுத்து பேசிய அவர் கோயில்கள் கூடாது என்பது திமுகவின் கொள்கை அல்ல. அது கொடியவர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்பதுதான் திமுகவின் கொள்கை என அவர் கூறியுள்ளது கோயில் பிடிக்காது சாமியை பிடிக்கும் என்கிற ரீதியில் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர்

PREV
click me!

Recommended Stories

களத்திற்கே வராத விஜய் களத்தை பற்றி பேசலாமா? இடைத்தேர்தல் நடக்கும்போது எங்க போனீங்க..? சீமான் கேள்வி
அல்லாஹவிடம் ஒப்படைக்கிறோம்..! ஹாதியின் மந்திரம் தொடர்ந்து எதிரொலிக்கும்..! உஸ்மான் இறுதிச் சடங்கில் யூனுஸ் சூளுரை..