ஸ்டாலினுக்கு வந்த ஐ.நா அழைப்பு.. குஷியில் உடன்பிறப்புகள்!!

By Asianet TamilFirst Published Aug 28, 2019, 4:12 PM IST
Highlights

திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டதில் பங்கேற்க அழைப்பு விடுக்கபட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையக் கூட்டம் வருகிற செப்டம்பர் 9 முதல் 27 வரை நடைபெற இருக்கிறது. உலக நாடுகளின் பல்வேறு முன்னணி தலைவர்களுக்கு இந்த கூட்டத்தில் பங்குகொள்ள அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த வரிசையில் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான முக.ஸ்டாலினுக்கும் அழைப்பு வந்துள்ளது.

உலக நாடுகளில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும், அதற்கான தீர்வுகள் குறித்தும் இந்த மாநாட்டில்  விவாதிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனை உச்சத்தை தொட்டிருக்கும் இந்த நேரத்தில் ஸ்டாலின் அந்த மாநாட்டில் பங்குகொள்ளும் பட்சத்தில் அது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஈழத்தமிழர் பிரச்சனை குறித்தும் பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஐ நா சபை ஸ்டாலினை இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளதால் திமுகவினர் உற்சாகம் அடைந்துள்ளனர். எனினும் ஸ்டாலின் கலந்து கொள்வது குறித்து திமுக தரப்பில் இன்னும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த 2017ம்  ஆண்டு கூட்டத்தில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்ட போது ஸ்டாலின் சட்டமன்ற பணிகள் காரணமாக பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!