சரிப்பட்டு வரலேன்னா வெளியில போக சொல்லுங்க...! கம்யூனிஸ்டுகளை எச்சரிக்கும் ஸ்டாலின்!

By Vishnu PriyaFirst Published Jan 28, 2019, 12:37 PM IST
Highlights

தங்களுக்குள் மோதிக் கொள்வதால் கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாதே?! மோடி பற்ற வைத்த ‘ரிசர்வேஷன்’ வெடியை இவர்கள் கையில் தூக்கி வைத்துக் கொண்டு சண்டை போடுகிறார்களே! என்று கடும் டென்ஷனில் இருக்கும் ஸ்டாலின், ‘இவங்களை மாத்தவே முடியாதா? பொது எதிரியை விட்டுட்டு பர்ஷனல் எதிரிகளை விரட்டிட்டு இருக்கிறாங்க.

‘தேய்ந்து கொண்டிருக்கும் இரண்டு கம்யூனிஸ்டுகளும் இணையவேண்டியது காலத்தின் கட்டாயம். இதை இந்திய கம்யூனிஸ்ட் உணர்ந்திருப்பதோடு இணைப்புக்கு தயாராகவும் இருக்கிறது. ஆனால் தன்னை எப்போதும் இந்திய கம்யூனிஸ்டை விட உயர்வாக கருதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டோ இந்த இணைப்புக்கு தயாராகமல் பிகு காட்டுகிறது.’ 

-காம்ரேடுகள் கட்சியை பற்றி அரசியல் விமர்சகர்களின் பொளே விமர்சனம் இது. இதில் துளியும் பொய்யோ அல்லது மிகைப்படுத்தலோ இல்லை என்பது அரசியல் அரங்கம் ஏற்றுக் கொள்ளும் உண்மை. சூழல் இப்படியிருக்கையில்....எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இரண்டு கம்யூன்ஸ்டுகளும் நெருங்கி வந்து, நட்பாக செயல்பட்டு, எதிர்கட்சிகளுக்கு பெரும் சவாலாய் இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படது. 

ஆனால் நடக்கும் யதார்த்தமோ எதிர்மறையாக இருக்கிறது. அதாவது, நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் ‘முற்பட்ட சமூகத்தினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு பத்து சதவீத இடஒதுக்கீடு!’ எனும் மோடி அரசின் முடிவுக்கு தமிழகத்தில் அத்தனை கட்சிகளும் எதிர்ப்பு தெரிவிக்க, மார்க்சிஸ்டோ ஆதரவு தெரிவித்திருக்கிறது. அதிலும் மார்க்சிஸ்ட் எம்.பி.யான டி.கே.ரங்கராஜன் மத்திய அரசின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார். 

இந்த விஷயத்தில் ரங்கராஜனின் கருத்துக்களை மிக அழுத்தமாக மறுத்திருக்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாஜி மாநில செயலாளரான தா.பாண்டியன். இதற்கு இ.கம்யூனிஸ்ட் எரிச்சல் காட்டிட, இரண்டு காம்ரேட் கட்சிகளுக்கும் இடையில் உரசல் மூண்டிருக்கிறது. இந்நிலையில் இதுபற்றி வாய் திறந்திருக்கும் டி.கே.ரங்கராஜன், “முற்பட்ட சமூகத்தில் உள்ள ஏழை மக்களுக்கும் இட ஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதுதான் இடது சாரிகளின் கருத்தாக இருந்து வருகிறது. மார்க்சிஸ்டுகள் இதில் எப்போதும் தெளிவாக  இருக்கிறோம். 

ஆனால் இந்திய கம்யூனிஸ்டுகள் ஏன் இதை எதிர்க்கிறார்கள் என்பதற்கு அவர்கள்தான் விளக்கம் சொல்ல வேண்டும். புதுவையில் நடந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் ஒரு பக்கத்தில் ‘பொருளாதார ரீதியாக பின் தங்கியிருப்பவர்களுக்கும் இட ஒதுக்கீடு கொடுக்கலாம்.’ என்று இருக்கிறது. இ.கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படைத் திட்டமும் இதைத்தான் சொல்கிறது. 

ஆனால் இப்போது தா.பாண்டியனே அதை எதிர்க்கிறார் என்றால் எப்படி? என்னைப் பொறுத்தவரையில் இந்த விஷயத்தில் தா.பாண்டியன் தனது சொந்தக் கருத்தைத்தான் பதிந்துள்ளார், அது அவரது கட்சியின் கருத்தில்லை.” என்றிருக்கிறார். ஆக இரு கம்யூனிஸ்டுகளுக்குள்ளும் உருவாகியிருக்கும் இந்த உரசல்,  தேர்தல் நேரத்தில் பின்னடைவை உருவாகியிருப்பது உறுதி. 

நாற்பது தொகுதிகளையும் நாடாளுமன்ற தேர்தலில் வின் பண்ணி ஆக வேண்டும் என்று வெறித்தனமாக உழைக்கும் ஸ்டாலின் கூட்டணியில்தான் இரண்டு கம்யூனிஸ்டுகளும் இருக்கிறார்கள். இப்படி இவர்கள் தங்களுக்குள் மோதிக் கொள்வதால் கூட்டணியின் வெற்றிக்கு சிக்கல் வந்துவிடக்கூடாதே?! மோடி பற்ற வைத்த ‘ரிசர்வேஷன்’ வெடியை இவர்கள் கையில் தூக்கி வைத்துக் கொண்டு சண்டை போடுகிறார்களே! என்று கடும் டென்ஷனில் இருக்கும் ஸ்டாலின், ‘இவங்களை மாத்தவே முடியாதா? பொது எதிரியை விட்டுட்டு பர்ஷனல் எதிரிகளை விரட்டிட்டு இருக்கிறாங்க! சரிப்பட்டு வரலேன்னா கிளம்ப சொல்லுங்க.” என்று  கடும் சவுண்டு விடுகிறாராம் தன் சகாக்களிடம்.

click me!