முதல்வர் ஸ்டாலின் கொங்குமண்டல பயணம்.. தேசிய அளவில் ட்ரெண்டாகும் #GoBackStalin..!

Published : May 30, 2021, 02:07 PM IST
முதல்வர் ஸ்டாலின் கொங்குமண்டல பயணம்.. தேசிய அளவில் ட்ரெண்டாகும்  #GoBackStalin..!

சுருக்கம்

முதல்வர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் முதல்முறையாக  #GoBackStalin ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

முதல்வர் ஸ்டாலினின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் முதல்முறையாக  #GoBackStalin ஹேஷ்டேக் தேசிய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் தலைநகர் சென்னையை பின்னுக்கு தள்ளி தொழில் நகரமான கோவை மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. நாள்தோறும் தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தை கடந்து வருகிறது. தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கோவைக்கு அடுத்தபடியாக திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா நோய் தொற்றின் பாதிப்பு நாளுக்குநாள் உயர்ந்து வருகிறது. 

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்து வருகிறார். 

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் கோவை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து #GoBackStalin என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. மேலும் ஸ்டாலினுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஹேஷ்டேக் ஒன்று தேசிய அளவில் ட்ரெண்டிங்கில் முதல் இடம் பிடிப்பதும் இது முதல் முறையாகும். ஏற்கனவே இது போன்று ட்ரெண்ட் ஆகியிருந்தாலும் அப்போதெல்லாம் முதல் இடத்தை பிடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

PREV
click me!

Recommended Stories

ரூ.1,020 கோடி ஊழல்? ED-க்கும், பாஜகவுக்கும் அஞ்ச மாட்டோம்.. கே.என்.நேரு விளக்கம்!
செந்தில் பாலாஜிக்கு பெரும் நிம்மதி..! உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..! முழு விவரம்!