பெருந்தொற்று, இயற்கைப் பேரிடரை இந்தியா மிக வெற்றிகரமாக சமாளித்துள்ளது.. பிரதமர் மோடி பெருமிதம்..!

By vinoth kumarFirst Published May 30, 2021, 12:41 PM IST
Highlights

போர்க்காலத்தில் செயல்படுவதுபோல நமது முப்படைகளும் விஞ்ஞானிகளும் செயல்பட்டனர். பெருந்தோற்று காலமாக இருந்தபோதும் வேளாண்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 7 ஆண்டுகளை நிறைவுசெய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது.

கொரோனா 2வது அலையை சமாளிக்க மருத்துவர்கள், செவிலியர்களின் சேவை பெரும் உதவியாக இருந்தது என பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில்;- கடந்த நூற்றாண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான சவாலை உலகம் சந்தித்திருக்கிறது.அதேநேரத்தில், இயற்கை பேரிடர்களையும் இந்தியா எதிர்கொண்டு உள்ளது. அம்பான் புயல், நிசார்க் புயலையும் எதிர்கொண்டோம். பல மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்டது. சிறிய நில நடுக்கமும் உண்டானது. நிலச்சரிவும் வந்தது. பெருந்தொற்று காலத்திலும் இயற்கைப் பேரிடரை இந்தியா மிக வெற்றிகரமாக சமாளித்துள்ளது. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அதனை உறுதியுடன் சமாளிப்போம் என்பது நிரூபணமாகியுள்ளது. 

நாடும், மக்களும், வலிமையுடன் புயலை எதிர்த்து போராடி, உயிரிழப்பை குறைத்தனர். புயல், மழை காலங்களில் துணிச்சலோடு மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கொரோனா 2வது அலையை சமாளிக்க மருத்துவர்கள், செவிலியர்களின் சேவை பெரும் உதவியாக உள்ளது. 2வது அலை இந்தியாவை தாக்கிய போது, ஆக்ஸிஜன் தேவை அதிகளவு அதிகரித்து பெரிய சவாலாக மாறியது. வெகு தூரத்தில் உள்ள இடங்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது பெரிய சவாலாக இருந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு 9,500 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆக்சிஜன் ஏற்றிச் சென்ற ரயில்களை நிறைய பெண் ஓட்டுநர்கள் இயக்கியது உத்வேகம் தருகிறது. 

போர்க்காலத்தில் செயல்படுவதுபோல நமது முப்படைகளும் விஞ்ஞானிகளும் செயல்பட்டனர். பெருந்தோற்று காலமாக இருந்தபோதும் வேளாண்துறை வேகமாக வளர்ந்து வருகிறது. 7 ஆண்டுகளை நிறைவுசெய்யும் எனது தலைமையிலான அரசு அனைத்து மக்களுக்கான அரசாக செயல்படுகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். எனது ஆட்சியில் சுகாதாரமான குடிநீர், வீடு, மின்சாரம் என அனைத்து கிடைத்து மக்கள் மகிழ்ச்சியுடன் உள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

click me!