மீண்டும் அரசியலில் சசிகலா ரீ என்ட்ரி... வைரலாகும் உரையாடல்... அதிர்ச்சியில் எடப்பாடியார்..!

By vinoth kumarFirst Published May 30, 2021, 11:20 AM IST
Highlights

நான் நிச்சயம் வருவேன். கட்சியை சரி செய்து கொள்ளலாம் என, தன் ஆதரவளர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நான் நிச்சயம் வருவேன். கட்சியை சரி செய்து கொள்ளலாம் என, தன் ஆதரவளர் ஒருவரிடம் சசிகலா பேசிய ஆடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அவரது தோழி சசிகலா, சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 2017 மார்ச் 14-ம் தேதி சிறை சென்றார். அவரது 4 ஆண்டு சிறை வாசம் முடிந்த நிலையில், கடந்த ஜனவரி 27-ம் தேதி விடுதலையானார். ஆனால், அப்போது அவருக்கு கரோனா பாதிப்பு இருந்ததால் பெங்களூருவிலேயே தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.

அதன்பிறகு, பிப்ரவரி 8-ம் தேதி சென்னை திரும்பினார். தொடர்ந்து அவர் அரசியலுக்கு வருவேன் என்று தெரிவித்தார். ஆனால், தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 3-ம் தேதி தீவிரஅரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்வதாக அறிவித்தார். இதனையடுத்து, நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவியது. தினகரனின் அமமுகவும் படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், சசிகலா தொண்டர் ஒருவரிடம் செல்போனில் பேசிய பேச்சு வைரலாகி வருகிறது. அதில் சசிகலா பேசிய உரையாடல் வருமாறு:

தொண்டர்: அம்மா ரொம்ப சந்தோஷம் மா...
சசிகலா: சரி நீங்க நல்லா இருக்கீங்களா...
தொண்டர்: நல்லா இருக்கேம்மா.. அம்மா நீங்க பேசுறது பெரிய விஷயம் மா...
சசிகலா: சரி... சரி.. வீட்டில் எல்லாம் நல்லா இருக்காங்களா..
தொண்டர்: பக்கத்தில பெரிய பொண்ணு இருக்கு.. சின்ன பையன் இருக்காம் மா..
சசிகலா: சரி.. ஒன்னும் கவலைப்படாதீங்க.. கட்சிய எல்லாம் சரி பண்ணிடலாம்... தைரியமா இருங்க எல்லாரும்..
தொண்டர்: ரொம்ப சந்தோஷம் மா.. உங்களுக்காக உயிரையே கொடுப்போம் மா.. உங்க பின்னாடி தான் எப்பவும் இருப்போம்.
சசிகலா: கொரோனா பிரச்னை ரொம்ப மோசமா இருக்கும்.. எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க. வீட்டிலேயும் எல்லாரும் ஜாக்கிரதையா இருங்க...
தொண்டர்: ரொம்ப சந்தோஷமா இருக்கு.. நீங்க வரணுமா..சசிகலா: நிச்சயம் நான் வந்திருவேன்.  இவ்வாறு அந்த உரையாடல் முடிகிறது. சிறையில் இருந்த வெளியே வந்த சசிகலா கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி. அதிமுகவில் அவருக்கு ஒருபோதும் கிடையாது என கூறியிருந்த நிலையில் சசிகலாவின் இந்த உரையாடல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!