கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது என இருக்காதீர்கள்.. அழுத்தம் கொடுங்கள்.. ஸ்டாலினுக்கு தினகரன் வலியுறுத்தல்.!

By vinoth kumarFirst Published May 30, 2021, 12:11 PM IST
Highlights

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களும் 'கடிதம் எழுதியதோடு கடமை முடிந்தது' என்று இல்லாமல் உரிய அழுத்தம் கொடுத்து ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன்  மாதத்தவணைகளிலிருந்து விலக்கு பெறுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு காலத்தில் வங்கிக்கடன் மாதத் தவணையில் இருந்து விலக்களிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சரை டிடிவி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இத்தனை நாட்கள் ஆன பிறகும் வங்கிக்கடன்களுக்கான மாத தவணையைச் (EMI) செலுத்துவதற்கான விதிவிலக்குகள் குறித்து ரிசர்வ் வங்கி இதுவரை அறிவிக்காதது கண்டனத்திற்குரியது.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச்  செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும்.

ஏழை மற்றும் நடுத்தர மக்களின் நலன் கருதி இதனைச் செய்திட வேண்டிய மத்திய அரசும் வேடிக்கை பார்ப்பது நியாயமல்ல. இப்பிரச்னையில் பிரதமரும், மத்திய நிதி அமைச்சரும் உடனடியாக தலையிட வேண்டும். 2/3

— TTV Dhinakaran (@TTVDhinakaran)

click me!