கவச உடை அணிந்து அச்சம் தவிர்த்த மு.க.ஸ்டாலின்.. கொங்கு மண்டலத்தில் அசத்தல்.!

By vinoth kumarFirst Published May 30, 2021, 1:45 PM IST
Highlights

கோவை இஎஸ்இ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

கோவை இஎஸ்இ மருத்துவமனையில் கொரோனா வார்டில் பாதுகாப்பு உடை அணிந்து நோயாளிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை மின்னல் வேகத்தில் தாக்கி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை கடந்த 8 நாட்களாக குறைந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தொழில்நகரமான கோவையில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் இன்று 3 மாவட்டங்களில் ஆய்வு செய்வார் என அறிவிக்கப்பட்டது.

இன்று காலை 10:00 மணிக்கு ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவ கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார். பின், அங்கிருந்து திருப்பூர் சென்று குமரன் கல்லூரியில் கொரோனா சிகிச்சை மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இரண்டு மாவட்டங்களில் ஆய்வு முடித்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் கோவை வந்தார்.இதனையடுத்து, கொரோனா நோயாளிகளை மருத்துவமனைக்கு எளிதாக அழைத்து செல்வதற்காக 50 இன்னோவா கார்கள் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார். 

பின்னர், முதல்முறையாக எந்த முதல்வரும் கொரோனா நோயாளிகளை நேரில் சென்று அவர்களின் நலம் குறித்து கேட்டறிந்ததில்லை. தற்போது முதல்முறையாக தமிழக முதல்வர் ஸ்டாலின் இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பாதுகாப்பு உடை அணிந்து கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று  வரும் வார்ட்டுக்கு சென்று நலம் விசாரித்தார்.

மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்டும் வரும் சிகிச்சை கேட்டறிந்திருக்கிறார். பிற்பகலில் 3 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்துகிறார். 

click me!