ஸ்டாலின் மட்டும் சீட் கொடுக்காம போகட்டும்...! தி.மு.க.வை மிரள வைக்கும் கூட்டணி கட்சி

By vinoth kumarFirst Published Nov 12, 2018, 9:33 AM IST
Highlights

தி.மு.க. இந்த இருபது தொகுதிகளிலும் தானே களமிறங்கி, வென்று ஆட்சி மாற்றத்தையே நடத்திடும் வெறியில் உள்ளது. ஆனால் அதேவேளையில், இங்கே தி.மு.க.வின் கூட்டணியில் நின்று போட்டியிட்ட நபர்களோ மீண்டும் தனக்கே அது வேண்டுமென்கிறார்கள். அப்படி அடம் பிடிப்பவர்களில் முக்கியமானவர் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவரான என்.ஆர்.தனபாலன். 

நாடாளுமன்ற தேர்தல் வைபரேஷன் ஒரு பக்கம் இருக்கட்டும். அதற்குள் 20  தொகுதி இடைத்தேர்தலுக்கான களேபரங்கள், தமிழக அரசியலை ஒரு கை பார்க்காமல் அடங்காது போலிருக்கிறது. அதிலும் பெரும் கூட்டணியை கட்டி இழுக்கும் முடிவிலிருக்கும் ஸ்டாலினுக்கு இப்போதே தலைவலிகள் துவங்கி விட்டன.

 

20 தொகுதிகளிலும், முன்பு அதே இடத்தில் போட்டியிட்டு தோற்ற நபர்கள் இந்த முறையும் களமிறங்கிட முடிவெடுத்துவிட்டார்கள். தி.மு.க. இந்த இருபது தொகுதிகளிலும் தானே களமிறங்கி, வென்று ஆட்சி மாற்றத்தையே நடத்திடும் வெறியில் உள்ளது. ஆனால் அதேவேளையில், இங்கே தி.மு.க.வின் கூட்டணியில் நின்று போட்டியிட்ட நபர்களோ மீண்டும் தனக்கே அது வேண்டுமென்கிறார்கள். அப்படி அடம் பிடிப்பவர்களில் முக்கியமானவர் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவரான என்.ஆர்.தனபாலன். 

கடந்த தேர்தலில் பெரம்பூர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் நின்று போட்டியிட்டவர், வெறும் ஐநூற்று சொச்சம் வாக்குகளில் வெற்றிவேலிடம் தோற்றார். இப்போது அவர், மீண்டும் எனக்கே இந்த தொகுதி வேண்டும் என்கிறார். இது சரியா? சாத்தியமா? என்று கேட்டால்... “கடந்த முறை இங்கே போட்டியிட்ட எங்களுக்கே மீண்டும் இதை ஒதுக்குவதுதானே நியாயம்! எங்களுக்கே மீண்டும் ஒதுக்குவதில் என்ன பிரச்னை வந்துவிட போகிறது?

நெடுங்காலமாக தி.மு.க.வுடன் பயணித்த வகையில், அக்கட்சியின் அங்கமாகவே ஆகிவிட்டோம் நாங்கள். நான் ஒன்றும் தனி சின்னத்தில் போட்டியிடவில்லையே, உதயசூரியன் சின்னத்தில்தானே போட்டியிட்டேன். மீண்டும் ஸ்டாலின் வாய்ப்பு கொடுக்கையில் அதேபோல் அதே சின்னத்தில்தான் போட்டியிடுவேன். நான் வெற்றி பெற்றால், தி.மு.க. எம்.எல்.ஏ.வாகதான் தொடர்வேன், ஸ்டாலின் முதல்வராக என்னுடைய எல்லா பங்களிப்பையும் தருவேன். 

ஒருவேளை எங்களுக்கு சீட் கிடைக்கவில்லை என்றால், என்னாகும்? என்று கேட்கிறார்கள். அதெப்படி சீட் கொடுக்காமல் போய்விடுவார்? இத்தனை வருஷங்களாக கூடவேதானே இருக்கிறோம், கொடுக்காமல் போயிடுவாரா.! அப்படி கொடுக்கவில்லை என்றால் அப்புறம் பார்ப்போம்.” என்கிறார் லேசாக பல்லை கடித்தபடி. என்.ஆர்.டி.யின் இந்த திடீர் பாய்ச்சல், ஸ்டாலினை அதிர வைத்துள்ளது. இவரைப் போல பிற கூட்டணி கட்சிகள் இன்னும் என்னென்ன குண்டுகள் வைத்திருக்கிறார்களோ!?

click me!