புற்று நோய் பாதிப்பு !! மத்திய அமைச்சர் அனந்த குமார் திடீர் மரணம்… கர்நாடகாவில் சோகம் !!

Published : Nov 12, 2018, 06:47 AM IST
புற்று நோய் பாதிப்பு !! மத்திய அமைச்சர் அனந்த குமார் திடீர் மரணம்… கர்நாடகாவில் சோகம் !!

சுருக்கம்

புற்று நோய்க்கு  சிகிச்சை பெற்று வந்த மத்திய அமைச்சர் அனந்தகுமார் பெங்களூருவில் இன்று அதிகாலை 2 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 59.

புற்று நோய் காரணமாக கடந்த 2 மாதங்களாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மத்திய ரசாயனம் மற்று உரம், நாடாளுமன்ற விவாரங்கள் துறை அமைச்சர் அனந்த குமார் சிகிச்சை பலனின்றி காலமானார்.

அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற பின்னர், பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 2 மணியளவில் அனந்த குமார் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர் பெங்களூரு தெற்கு தொகுதியில் 1996,98, 99,2004,2009,2014 என 6 முறை வெற்றி பெற்றுள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு நடைபெறற தேர்தலில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசில் ரசாயனம் ,உரம் மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார்.

பாஜகவின் தேசியச்செயலாளர் உட்பட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர் அனந்தகுமார் ஆவார். பிரதமர் மோடிக்கு மிகவும் நெருக்கமாக கருதப்பட்டு வந்த அனந்த குமாரின் திடீர் மரணம் கர்நாடக மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

அப்போ எல்லாமே வதந்தி தானா.. போட்டி போட்டு மறுத்த டிடிவி தினகரன், தமிழிசை.. என்ன விஷயம்?
விஜய்யை சீண்டாதீங்க.. பாஜகவினருக்கு டெல்லி கொடுத்த 'சைலண்ட்' வார்னிங்.. மாஸ்டர் பிளான்!