இந்துக்கள் பயன் பெற்றது கலைஞரால்தான்... அந்தர் பல்டியடித்த கனிமொழி..!

By Vishnu PriyaFirst Published Apr 17, 2019, 3:08 PM IST
Highlights

தூத்துக்குடியில் போட்டியிடலாமென்று தமிழிசை தனது ஆதார் அட்டையை தேடி எடுக்கும் முன்பே கனிமொழி அந்த ஊரில் செட்டிலாகி, கிட்டத்தட்ட பாதி பிரசாரத்தை முடித்திருந்தார். ஆனாலும் லேட்டாய் வந்தாலும் கூட லேட்டஸ்டாய் தமிழக்கா எடுத்து வைத்த சில சென்டிமெண்ட் விஷயங்களால், சைவம் போற்றப்படும் தூத்துக்குடி மண்ணில் பி.ஜே.பி.க்கு பெரிய வாய்ப்பு உருவானது.

தூத்துக்குடியில் போட்டியிடலாமென்று தமிழிசை தனது ஆதார் அட்டையை தேடி எடுக்கும் முன்பே கனிமொழி அந்த ஊரில் செட்டிலாகி, கிட்டத்தட்ட பாதி பிரசாரத்தை முடித்திருந்தார். ஆனாலும் லேட்டாய் வந்தாலும் கூட லேட்டஸ்டாய் தமிழக்கா எடுத்து வைத்த சில சென்டிமெண்ட் விஷயங்களால், சைவம் போற்றப்படும் தூத்துக்குடி மண்ணில் பி.ஜே.பி.க்கு பெரிய வாய்ப்பு உருவானது. 

இதை சட்டென்று உணர்ந்து கியரை மாற்றிய கனிமொழி, பிரசாரத்தின் இறுதி நாட்களில் ‘இந்துத்வ’ ஆதரவு கொடியை உயர்த்திப் பிடித்ததுடன், தங்கள் கட்சிதான்  இந்துக்களுக்கு அதிகம் அள்ளியள்ளி கொடுத்திருக்கிறது, செய்திருக்கிறது என்று எடுத்துவிட்டதுதான் ஹைலைட்டே. “இந்துக்களின் எதிரி தி.மு.க! என்று பேசுபவர்களைப் பார்த்து கேட்கிறேன், இந்துக்களுக்கு எதிராக என்ன செய்தது தி.மு.க? என்று எதையாவது சொல்ல முடியுமா! தி.மு.க. ஆட்சிக்காலத்தில்தான் பல கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் எங்கள் ஆட்சிக்காலத்தில்தான் சிறப்பாக பராமரிக்கப்பட்டது. 

ஆனால் இந்த ஆட்சியில், அந்த கோயிலின் பிரகாரம் இடிந்து ஒன்றரை வருடங்களாகியும் கூட இன்னமும் சரி செய்யவில்லை. கோயிலுக்குள் அனைத்து சாதி இந்துக்களும் அனுமதிக்கப்பட வேண்டும் என்று போராட்டங்களை முன்னெடுத்தது தி.மு.க.தானே! இவ்வளவு ஏன் தி.மு.க. ஆட்சியில் இடஒதுக்கீட்டால்  பயன்பெற்றவர்கள் இந்துக்கள்தான். ஆனால் எங்களை இந்துக்களின் விரோதியாகவே சித்தரிக்கிறார்கள்.” என்று போட்டுத் தாக்கியிருக்கிறார்.

 அதேபோல் ‘தூத்துக்குடியில் வீடு எடுத்து தங்கித்தான் பிரசாரம் செய்கிறேன். எம்.பி.யானால் இங்கேயேதான் தங்கியிருந்து மக்கள் பணி செய்வேன். நாடாளுமன்ற பணிகளுக்காக டெல்லிக்கும், கட்சிப் பணிகளுக்காக சென்னைக்கும் செல்வேனே தவிர அதிக நாட்கள் இங்கேயேதான் இருப்பேன்.” என்றாராம். உடனே மக்கள்...’க்கும் சரத்துக்குமாரும் இப்படித்தான் சொன்னாரு தென்காசியில. எம்.எல்.ஏ.வான பிறகு குற்றால சீசனுக்கு கூட கரை ஒதுங்கலை!’ என்றார்களாம். அதற்கு கனிமொழி ‘நான் கலைஞரின் மகள். வாக்கு கொடுத்தா காப்பாத்துவேன்.’ என்றிருக்கிறார் ஸ்டாலின் ஸ்டைலில். நல்ல வேளை...அந்த மாங்கா, வாய் மேட்டரை பேசலை.

click me!