இப்படி செய்து விட்டார்களே... மு.க.ஸ்டாலின், ராமதாஸுடன் சேர்ந்து பொங்கி எழுந்த டி.டி.வி.தினகரன்..!

By Thiraviaraj RMFirst Published Jul 3, 2019, 1:06 PM IST
Highlights

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஆனால் தமிழ் மொழி அந்தப்பட்டியலில் இல்லாதற்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 
 

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை இந்தி, அசாமி, ஒடியா, தெலுங்கு, கன்னடம் ஆகிய மாநில மொழிகளிலும் வெளியிடுவது என்று உச்சநீதிமன்றம் முடிவெடுத்துள்ளது. ஆனால் தமிழ் மொழி அந்தப்பட்டியலில் இல்லாதற்கு பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். 

உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கான மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் சேர்க்க தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

’’உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்து வெளியிட தலைமை நீதிபதி விரும்புவதாக வெளிவந்துள்ள செய்தி மகிழ்ச்சியளிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் வழக்குகளைத் தொடுப்பவர்கள் மொழிப் பிரச்சினையின்றி - குழப்பமும் சந்தேகமும் இல்லாமல், தீர்ப்புகளின் சாரம்சத்தைத் புரிந்து கொள்ளவும், வாத - பிரதிவாதங்களை தெரிந்து கொள்ளவும் வழிவகுக்கும்.

இது இந்திய நீதி பரிபாலனச் சரித்திரத்தில் மிக முக்கிய மைல்கல். இதன் மூலம் கன்னடம் - தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்பிருக்கும். ஆனால் தமிழ் மொழி உச்சநீதிமன்றத்தின் பட்டியலில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தின் அலுவலக மொழி அந்தஸ்தில் செம்மொழியாம் தமிழ் மொழி ஆரம்பம் முதலே இருந்து வருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியிலும் வெளியிடப்படுவது தமிழக மக்களுக்குப் பேருதவியாக இருக்கும். இந்தியத் துணைக் கண்டத்திலேயே மூத்ததும் முதன்மையானதும் - இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்றுச் செழுமையானதுமான செம்மொழி தமிழை உச்ச நீதிமன்றம் தவிர்ப்பது, உலகத் தமிழர்கள் மற்றும் மேலை, கீழை நாடுகளின் தமிழறிஞர்களுக்குப் அய்யப்பாடுகளைத் தோற்றுவித்துவிடும். உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவரும் மொழிப் பட்டியலில் தமிழை சேர்க்க  வேண்டும். 

இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது ட்விட்டர் பக்க்கத்தில், ‘’அலுவல் ரீதியாக பயன்படுவதற்கான அத்தனை கட்டமைப்புகளும் தமிழ்மொழிக்கு உண்டு. ஆகவே, உச்சநீதிமன்றம் தீர்ப்பு நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழையும் அவசியம் சேர்க்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல்களை வெளியிடும் மாநில மொழிகளின் பட்டியலில் தமிழ்மொழி இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது. உலகம் முழுக்க கொண்டாடப்படும் மொழியாகவும், செம்மொழி அங்கீகாரம் பெற்றிருக்கும் மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது’’ எனத் தெரிவித்துள்ளார்.
 

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இது குறித்து, ‘’உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்.உலகின் மூத்த மொழியான தமிழிலும் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் வெளியிடப்பட வேண்டும். தேவைப்பட்டால் அதற்கான உதவிகளையும், கட்டமைப்புகளையும் தமிழக அரசிடமிருந்து உச்சநீதிமன்றம் கேட்டுப் பெறலாம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

click me!