முடிந்தது பிகே டீல்!! மீண்டும் ஆட்சியை பிடித்தே தீருவேன் என எடப்பாடி சபதம்...

By sathish kFirst Published Jul 3, 2019, 12:57 PM IST
Highlights

தமிழகத்தில் செல்வாக்கு சரிந்து கிடக்கும் அதிமுகவை தூக்கி நிறுத்தி தன வசப்படுத்தவும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில்  மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் மெகா பட்ஜெட்டில், தேர்தல் வியூகப்புலி பிகேவோடு டீல் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழகத்தில் செல்வாக்கு சரிந்து கிடக்கும் அதிமுகவை தூக்கி நிறுத்தி தன வசப்படுத்தவும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலில்  மீண்டும் ஆட்சியை கைப்பற்றவும் மெகா பட்ஜெட்டில், தேர்தல் வியூகப்புலி பிகேவோடு டீல் பேசி முடிக்கப்பட்டுவிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது. 

நடந்து முடிந்த தேர்தலில் அதலபாதாளத்தில் சரிந்து விழுந்தது அதிமுகவின் வாக்கு வங்கி. அதேபோல  தேர்தல் வியூகங்களை விட, கட்சியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னை நிலை நிறுத்திக் கொள்வதற்காக தேர்தல் வியூக மன்னன் பிகே எனும் பிரஷாந்த் கிஷோரை டெல்லியில் சந்தித்து பேசினார். கட்சியில் தன்னை ஒற்றைத் தலைமையாக எடப்பாடி நிலை நிறுத்திக் கொண்டால்தான் அடுத்து வரும் தேர்தலை அதிமுக திடமாக எதிர்கொள்ள முடியும். கட்சியில் இரட்டைத் தலைமை என்றால் மீண்டும் தேர்தலை சந்திப்பதில் அதிமுகவுக்கு கடும் சிரமம் இருக்கும் என்று கருதிய எடப்பாடி பிகேவின் முக்கியத்துவத்தை உணர்ந்து பட்ஜெட் பற்றியெல்லாம் கவலைப்படாமல் களத்தில் இறங்கியுள்ளார்.

தேர்தல் வியூகம் வகுத்துக்கொடுக்கும் இந்த மெகா புராஜெட்க்காக சுமார் 500 பேர் ஊழியர்கள் வேலை பார்ப்பார்கள், அதற்காக எடப்பாடியிடம் ரூ.150 கோடி பில் கொடுத்தாராம். பிகேவின் சம்பளம் மட்டுமே 40 கோடியாம்! ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு போதிய உறுப்பினர்கள் இருந்தாலும், திமுகவின் ஆள் தூக்கும் வேலையால், கூடிய விரைவில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் என்பதால்  எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள எடப்பாடி தீவிரமாக முயன்றார் ஆனால், தற்போது திமுக அந்த வேலையை கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில், மீதமுள்ள நாட்களை எந்த பிரட்சனையும் இல்லாமல் காலம் தள்ள வேண்டும் என நினைக்காத எடப்பாடி பழனிசாமி, மீண்டும் முதல்வராக வேண்டும் அதுமட்டுமல்லாமல், இப்போது இருக்கும் துணை முதல்வர் பதவியை மீண்டும் ஓபிஎஸ்ஸுக்கு கொடுக்கக்கூடாது என்பதிலும், ஒற்றைத்தலைமை தாம் தான் இருக்கவேண்டும். அடுத்த தேர்தலில் மீண்டும் தானே முதல்வராக வரவேண்டும் அதற்கான வியூகம் வகுப்பதற்கான ஏற்பாடுதான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்தாராம்.

இந்த சந்திப்புக்கு அதிமுக முன்னாள் ராஜ்யசபா எம்பியான வில்லியம் ரபி பெர்னார்ட்  ஏற்பாடு செய்திருக்கிறார். ரபி பெர்னார்ட் முதல்வரின் சொந்த ஊர் மட்டுமல்ல, மீடியா உலகிலும், அரசியல் உலகிலும் உள்ள தன்னுடைய அனுபவத்தை , எடப்பாடிக்காக திரைமறைவில் பயன்படுத்தி வருகிறார். அவரது யோசனையில் தான் பிரசாந்த் கிஷோரை எடப்பாடி சந்தித்திருக்கிறார். 

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பிஜேபியின்  பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு தேர்தல் ஆலோசனைக்கு கொடுத்தது.  அடுத்து, 2015 ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் நிதீஷ் குமாரை ப்ரமோட் செய்து. நிதீஷ் குமாரை  ஆட்சி அமைக்கவைத்தது. இதனைத் தொடர்ந்து, ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டி ஜெயித்தார் ஆனால் இதற்க்கு நான்கு வருடத்திற்கு முன்பே போட்டு கொடுத்த பிளானை பக்காவாக இம்ப்லீமென்ட் செய்து வெற்றி பெற்றுள்ளார். அடுத்ததாக, மேற்குவங்காளத்தில் அடுத்து வர இருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காக மம்தா பானர்ஜிக்காக தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்துள்ளாராம்.

ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் இவர் பாகுபாடின்றி வியூகம் அமைத்து தரும் இன்டலிஜெண்ட், எலக்ஷனுக்காக பக்காவாக ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பவர் தான் இந்த பிரஷாந்த் கிஷோர், இவர் ஐபேக் நிறுவன ஆலோசகராக இருக்கிறார். அதேபோல, ஓஎம்ஜி நிறுவனமும் இவருடையது தான், இதில் கொடுமை என்னன்னா? பிரஷாந்த் கிஷோரும் ஸ்டாலினின் மருமகன் சபரீசனும் பயங்கர தோஸ்த்தாம், "had your breakfast? had your lunch? என  தினமும் போனில் கேட்கும் அளவிற்கு தோஸ்த்தாம்,  ஓஎம்ஜி என்கிற நிறுவனம்தான் திமுகவுக்கு பிரசார, விளம்பர வியூகங்களை வகுத்து கொடுக்கிறது.

இவரை வைத்து தேர்தல் பிளான் போடுவதா? இவரோடு நாம் டீல் வைத்து கொண்டால் என்னவாகும்?  என முட்டுக்கட்டை போட்டது ஓபிஎஸ் கேங், இந்த குழப்பமான கேப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியை நடத்திவரும் கமல்ஹாசனை பிகே சந்தித்த தகவலை அறிந்த எடப்பாடி பழனிச்சாமி, நமக்கு பில் கொடுத்துவிட்டு இப்படி கமலுக்கு ஐடியா கொடுக்க ஆழ்வார்பேட்டைக்கு போயிருக்கிறாரே இந்த பிகே என, பிகேவை அறிமுகப்படுத்தியவர்களிடம் போன்போட்டு புலம்பித்தள்ளி இருக்கிறார்.  ஒரே நேரத்தில் பல்வேறு கட்சிகளுக்கு அக்ரிமெண்ட் போட்டு பாகுபாடின்றி பல கட்சிகளுக்கு பக்கா பிளான் போட்டுத் தருவதில் இன்டலிஜெண்ட் தான், அதற்காக ஒரே மாநிலத்தில் எத்தனைப்பேருக்குத்தான் ஐடியா கொடுப்பாரு? என குழம்பி இருந்தாராம். இந்நிலையில் நேற்று முன்தினம் பிரஷாந்த் கிஷோருடன் டீல் பேசி முடிக்கப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அடுத்ததும் அதிமுக ஆட்சியே அமைய வேண்டும், அதில் ஒற்றை தலைமையின் கீழ் இந்த ஆட்சி இருக்கவேண்டும், துணைமுதல்வர் என்கிற பஜனை வேலையே இருக்க கூடாது என்பதில் குறியாக இருக்கும்  எடப்பாடி, பிகே கொடுத்த பில்லுக்கு எந்த பெறமும் பேசாமல் ஓகே சொல்லியிருக்கிறார். எடப்பாடியின் இந்த மெகா பிளானுக்கு பின்னணியில் பிஜேபி இருப்பதும் உறுதியாகியுள்ளது.

click me!