சீக்கிரமா சட்டசபையை முடிங்கப்பா ! கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும்ல !! அவசரப்பட்ட எம்எல்ஏ!

Published : Jul 03, 2019, 12:54 PM IST
சீக்கிரமா சட்டசபையை முடிங்கப்பா ! கிரிக்கெட் மேட்ச் பார்க்கணும்ல !! அவசரப்பட்ட எம்எல்ஏ!

சுருக்கம்

தமிழக சட்டப் பேரவையில் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடற்து கொண்டிருந்த போது, சென்னையைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் தனது சக எம்எல்ஏவிடம், அவையை சீக்கிரம் முடிக்கச் சொல்லுப்பா ! கிரிக்கெட் மேட்ச் பார்க்க போகணும் அவசரப்படுத்தியது பத்திரிக்கைகளில் வெளிவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது  

தமிழக சட்டப் பேரவையில் நேற்று அமைச்சர் அன்பழகன் கல்லூரிகளில் செய்யப்பட்டு வரும் மாற்றங்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த  ஒரு எம்எல்ஏ தனது சக எம்.எல்.ஏவிடம் சீக்கிரம் சட்டசபை கூட்டத்தை முடித்தால் வீட்டுக்கு சென்று மேட்ச் பார்க்கலாம் என்று கூறியுள்ளார்,

இந்த செய்தியை வெளியிட்ட  ஆங்கில ஊடகம் ஒன்று, மக்களின் பிரதிநிதிகள் மனநிலை இப்படித்தான் உள்ளதா? மக்கள் பிரச்சனைகளைவி கிரிக்கெட் பெரிதா ? என கேள்வி எழுப்பியிருந்தது.

நேற்று நடந்த இந்தியா-வங்கதேசம் இடையே நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை உலகமே பார்த்தது. அதே நேரத்தில் இந்திய   கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழக சட்டசபையில் இருந்த எம்.எல்.ஏக்களும் மேட்ச் பார்க்க ஆர்வம் காட்டினர். 

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து எம்.எல்.ஏக்களும் மேட்ச் பார்ப்பதற்காக நேற்று வீட்டுக்கு செல்ல அவசரப்பட்டனர். ஒரு மூத்த எம்.எல்.ஏ சட்டசபையில் முக்கிய விவாதம் நடந்து கொண்டிருந்தபோது எழுந்து வெளியே சென்றார்.

அதனையடுத்து ஆளும் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் தனக்கு அருகில் இருந்த எம்.எல்.ஏவிடம் 'இந்த விவாதம் சீக்கிரம் முடிந்தால் நன்றாக இருக்கும், இந்தியா மேட்ச் பார்க்கணும் என்று சொல்லியிருக்கின்றாராம். அதுபோல் நேற்று பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் சட்டசபை கூட்டம் முடியும் முன்னரே எழுந்து சென்றுவிட்டனர்.
 

PREV
click me!

Recommended Stories

Jana Nayagan: ஜனநாயகன் படத்தை சரசரவென வெட்டித்தள்ளிய சென்சார்.?! நீக்கப்பட்ட 12 முக்கிய காட்சிகள் என்னென்ன?
Kollur Temple: விஜய்யைத் தொடர்ந்து கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு படையெடுத்த மற்றொரு முதல்வர்!