என்னை காப்பியடிக்கிறார் மு.க.ஸ்டாலின்... கமல் பகீர் குற்றச்சாட்டு..!

Published : Mar 08, 2021, 11:27 AM IST
என்னை காப்பியடிக்கிறார் மு.க.ஸ்டாலின்... கமல் பகீர் குற்றச்சாட்டு..!

சுருக்கம்

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 ஊக்கத் தொகை அளிப்பதாக தான் அறிவித்த திட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காப்பி அடித்திருப்பதாக மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.  

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட மிண்ட் தங்க சாலையில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் பரப்புரைக் பொதுகூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், “மக்கள் நீதி மய்யத்தை கூட்டணியில் சேர வருமாறு காங்கிரஸ் ஏன் அழைத்தது? தன்னுடைய கூட்டணி வெல்லாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதற்கு பதலடிகொடுத்து பேசினார். நான் குடும்ப தலைவிகளுக்காக அறிவித்த திட்டங்களை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அப்படியே மீண்டும் தன்னுடைய திட்டம் போல் சொல்லி வருகிறார். என்னுடைய கட்சி சார்பில் ‘நாமே தீர்வு’என்ற தலைப்பில் பரப்புரை மேற்கொள்ளப்படுகிறது. அதையே ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’என்று மாற்றி பரப்புரை மேற்கொண்டு வருகிறார்’’ என அவர் குற்றம்சாட்டினார். 
 
PREV
click me!

Recommended Stories

எந்த நீதிமன்றம் சென்றாலும் ராமதாஸ் வெற்றி பெற முடியாது..! கே.பாலு சவால்!
இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!