#BREAKING சென்டிமென்ட்டாக பேசியே மார்க்சிஸ்ட்டை வழிக்கு கொண்டு வந்த திமுக.. கையெழுத்தானது ஒப்பந்தம்..!

By vinoth kumarFirst Published Mar 8, 2021, 10:55 AM IST
Highlights

திமுக கூட்டனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடனான தொகுதி பங்கீடு இழுபறி முடிவுக்கு வந்தது. இதனையடுத்து,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீட்டை அடுத்து இருகட்சிகளுக்கு இடையேயான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணி 25 தொகுதிகளை காங்கிரஸும், மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் தலா 6 தொகுதிகளையும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 3 தொகுதிகள், மனிதநேய மக்கள் கட்சி 2 தொகுதிகளையும் பெற்றுக்கொண்டன.

இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் திமுகவுடன் தொடர்ந்து பிடிவாதமாகப் பேசி வந்தது. கூட்டணியில் விரிசல் ஏற்படாமல் திமுக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுக வழங்கும் 6 தொகுதிகளை ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கே.பாலகிருஷ்ணன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இன்று திமுகவுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்துகின்றன.

click me!