லண்டன் செல்கிறார் மு.க.ஸ்டாலின்... டாக்டர்கள் அதிரடி அட்வைஸ்..!

By Thiraviaraj RMFirst Published Dec 11, 2020, 4:50 PM IST
Highlights

உடல்நல பாதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்காக த்னி விமானத்தில் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

உடல்நல பாதிக்கப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிகிச்சைக்காக த்னி விமானத்தில் லண்டன் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் லண்டன் சென்று மருத்துவ பரிசோதனைகள் செய்து வந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். இந்த ஆண்டும் ஜனவரி மாதம் அவர் லண்டன் செல்வதாக இருந்தது. ஆனால், கொரோனா தாக்கம் அப்போது வெளிநாடுகளில் அதிகம் இருந்ததால், அந்த பயணம் தடைபட்டது.
அதன்பின்னர், ஜூன் மாதத்தில் லண்டன் சென்று ஆக வேண்டும் என்று மருத்துவர்கள் சொன்னதாகவும், ஆனால், பொதுமுடக்கத்தினால் சர்வதேச விமானங்கள் தடை செய்யப்பட்டிருந்ததாலும் என்ன செய்வதென்று தவித்ததாகவும், தனி விமானம் மூலம் லண்டன் செல்ல மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்ததாகவும் தகவல் வெளியானது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என்றும், தனி விமானம் கேட்டு திமுக யாரையும் அணுகவில்லை என்றும் திமுக தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.

லண்டன் போக முடியாததால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடைப்பயிற்சி, சைக்கிள் பயிற்சி என உடற்பயிற்சிகளை தீவிரப்படுத்தினார் ஸ்டாலின். வெளியூர் பயணங்களை தவிர்த்து, காணொளி வாயிலாகவே கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். கொரோனா தாக்கம் இன்னமும் குறையாத சூழலில், ஸ்டாலின் லண்டன் போக முடியாததால் அவரது ரத்த மாதிரிகள் உள்ளிட்டவை சேகரிக்கப்பட்டு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. பரிசோதனை முடிவுகள் வந்த பிறகு இங்கிருக்கும் மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சைகள் அளித்து வந்தனர்.  தற்போதைக்கு ஸ்டாலினுக்கு எந்த வித பிரச்சனையும் இல்லை. அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். 

​இந்நிலையில் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிவாரண பொருட்கள் வழங்கினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டது. அதன் காரணமாக உடனே அருகில் இருந்த தனியார் மருத்துமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பரிசோதனைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை சென்ற அவர் அங்கிருந்து பரிசோதனை முடிந்து வீடுதிரும்பியுள்ளார், அவருடன், துரைமுருகன்,  டி.ஆர் பாலு, சபரீசன் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர். 

ரத்த அழுத்தம் காரணமாக அவருக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டு இருக்கலாம் எனவும், அவர் ஓய்வெடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள் என்றும் இதுதொடர்பாக ஸ்டாலின் தரப்பில் கூறப்பட்டது. லேசான மயக்கம் மட்டும் உடல் சோர்வு ஏற்பட்டதாக ஸ்டாலின் கூறினார். ஆனால், மேல்சிகிச்சை அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் மு.க ஸ்டாலின் உடல் பரிசோதனைக்காக லண்டன் செல்ல உள்ளதாகவும், அவர் தனி விமானத்தில் லண்டன் செல்ல உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ​
 

click me!