கருணாநிதி ஆட்சியில் கைகூடாததை நிறைவேற்றும் மு.க.ஸ்டாலின்... யார் யாருக்கெல்லாம் காத்திருக்கிறதோ அதிர்ஷ்டம்..!

Published : Jul 26, 2021, 03:18 PM IST
கருணாநிதி ஆட்சியில் கைகூடாததை நிறைவேற்றும் மு.க.ஸ்டாலின்... யார் யாருக்கெல்லாம் காத்திருக்கிறதோ அதிர்ஷ்டம்..!

சுருக்கம்

கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றியும், அப்போதைய அரசியல் சூழலால், மேல்சபையை கொண்டு வர முடியவில்லை.

கடந்த 1986ம் ஆண்டு, எம்.ஜி.ஆர்., தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி யில் தான், மேல்சபை கலைக்கப்பட்டது. அதனால், மேல்சபையை மீண்டும் கொண்டு வர, ஜெயலலிதா விரும்பவில்லை. கருணாநிதி தலைமையிலான தி.மு.க., ஆட்சியில், மூன்று முறை தீர்மானம் நிறைவேற்றியும், அப்போதைய அரசியல் சூழலால், மேல்சபையை கொண்டு வர முடியவில்லை.

இந்நிலையில் சட்ட மேல்சபை உருவாக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, அந்த வாக்குறுதியை நிறைவேற்ற, முதல்வர் ஸ்டாலின் விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் 35 ஆண்டுகளுக்கு பிறகு சட்ட மேல்சபை உருவாக்கும் முயற்சிகள் மும்மரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. அந்தப் பொறுப்பு ஒரு அமைச்சர், மூத்த அதிகாரிகளிடம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

வரும் ஆகஸ்ட் 2ம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை வருகிறார். அதன் பிறகு சட்டசபை கூட்டத் தொடர் நடைபெற உள்ளது. அந்தத் தொடரில் நிச்சயம் சட்டமன்ற மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றி அடுத்த குளிர்கால கூட்டத் தொடரில், நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் தீர்மானம் நிறைவேறி, ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கப்பட்டதும், அடுத்த ஆண்டு மேல்சபை வர நிச்சயம் வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

 

50க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவர். அதில் அதிக அளவு திமுக வெற்றி பெற்றாலும் கவர்னர் மூலம் நடைபெறும் நியமனங்கள் மூலம் பாஜக மேலவையில் நுழைய வாய்ப்புள்ளது என்பதால் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறுவதில் சிரமங்கள் இருக்காது என திமுக நம்புகிறது. இதன் மூலம் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி நினைத்து கைகூடாத ஒன்றை ஸ்டாலின் நிறைவேற்ற உள்ளார். ஆனால், சிலர் மேல்சபை உறுப்பினர்களின் நியமனம் தேவையற்றது. அதனால் செலவுகள் அதிகமாகும். 6 லட்சம் ரூபாய் கடனில் இருக்கும்போது அதனை தவிர்ப்பதே நல்லது என்கிறனர்.
 

PREV
click me!

Recommended Stories

இந்த ஸ்டாலினிடம் உங்கள் பாச்சா பலிக்காது..! தூங்கா நகரில் பாஜகவுக்கு சவால் விட்ட முதல்வர்!
எச்.ராஜா மீது 3 பிரிவுகளில் பாய்ந்தது வழக்கு..! காவல்துறை அதிரடி!