மு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்... உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..!

Published : Sep 24, 2021, 10:33 PM IST
மு.க.ஸ்டாலின் 16 அடி பாய்கிறார்...  உதயநிதி அதுக்கும் மேலே... தாறுமாறாக புகழ்ந்து தள்ளும் அமைச்சர்..!

சுருக்கம்

முதல்வர் மு.க. ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவருடைய மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார் என்று உதயநிதியைத் தாறுமாறாகப் புகழ்ந்து பேசினார் தமிழக அமைச்சர் காந்தி.  

ராணிப்பேட்டை மாவட் திமுக அலுவலகத்தில் திமுக சார்பில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், கைத்தறி துறை அமைச்சர் காந்தி பங்கேற்று பேசினார். “திமுக அரசு பொறுப்பேற்று 5 மாதங்கள் கூட நிறைவடையவில்லை. அதற்குள் சொன்ன வாக்குறுதிகள் மட்டுமல்ல, எல்லாவற்றையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தினமும் புதிய திட்டங்களை அறிவிப்பதால் உலக அளவில் அவர் பாராட்டுகளை பெற்று வருகிறார்.


கடந்த காலத்தில் எதிர்க்கட்சியாக இருந்தபோதே நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக 60 சதவீத வெற்றியைப் பெற்றது. தற்போது திமுக ஆட்சியில் உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீத வெற்றியைப் பெற வேண்டும். இனி 50 ஆண்டுகளுக்கு தமிழகத்தில் திமுக ஆட்சியே தொடரும். வேறு ஆட்சி தமிழகத்தில் அமைய வாய்ப்பே இல்லை. தாய் 16 அடி பாய்ந்தால் குட்டி 32 அடி பாயும் என்று சொல்லுவார்கள். ஸ்டாலின் 16 அடி பாய்ந்தால் அவரது மகன் 32 அடி பாய்வது போல் செயலாற்றுகிறார்.” என்று அமைச்சர் காந்தி பேசினார்.

PREV
click me!

Recommended Stories

Dhanush: தனுஷின் அரசியல் என்ட்ரி.! தலைவராக ரஜினி, பொதுச்செயலாளராக தனுஷ்? வெளியாகும் முக்கிய அறிவிப்பு!
TN Cooperative Banks Gold Loan: தங்கம் வைத்திருப்போருக்கு ஜாக்பாட்! ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.10,000 வரை கடன் - கூட்டுறவுத் துறை அதிரடி!