அதிமுக கோட்டைக்குள் ஸ்டாலின்!! பதிலடி கொடுக்க தயாராகும் வேலுமணி...

By sathish kFirst Published May 5, 2019, 11:42 AM IST
Highlights

அதிமுகவின் கோட்டையான சூலூர் தொகுதியில் சந்தையில் நடைபயணமாக சென்று தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் மு.க.ஸ்டாலின். கொங்கு மண்டலத்தில் சூலூர் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் களமிறங்கியுள்ளார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

அதிமுகவின் கோட்டையான சூலூர் தொகுதியில் சந்தையில் நடைபயணமாக சென்று தி.மு.க. வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார் மு.க.ஸ்டாலின். கொங்கு மண்டலத்தில் சூலூர் அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் களமிறங்கியுள்ளார் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி.

கோவை சூலூர் எம்.ல்.ஏ கனகராஜ் மறைந்ததற்குப் பின் இடைத்தேர்தல் நடத்தப்படும் தொகுதியாக உள்ளது. திமுகவின் வேட்பாளராக மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அமமுக வேட்பாளராக பொள்ளாச்சி, மாஜி எம்.பி சுகுமார். அதேபோல் தற்போது அதிமுக வேட்பாளராக வி.பி.கந்தசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் எப்போதும் அதிமுகவின் கோட்டை என்பது கடந்த இந்த தேர்தலிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் மொத்தம் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இதில் சூலூர் தொகுதியில்  அதிமுக வேட்பாளர்  கனகராஜ் 36,631வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 

இந்த நிலையில், அதிமுகவின் கோட்டையான  சூலூரில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் வெற்றியை அள்ளும் நோக்கத்தில் உள்ளே நுழைந்துள்ளார். இருகூர் பகுதி சந்தையில் காலையில் நடைபயணமாக சென்றார்.  அங்கு கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

இதனால் கோயமுத்தூர் மாவட்ட கழகத்தில் பெரும் பண செல்வாக்குடைய மாஜி அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு தானாகவே முன் வந்து சீட் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின். கிட்டத்தட்ட இருபது கோடி ரூபாய் வரை பொங்கலூர் பழனிசாமி செலவு செய்ய வேண்டி இருக்கும் என தலைமை திட்டமிட்டு கொடுத்துள்ளது. கொங்கு மண்டலத்தில் திமுக வீக் தான், ஆனால், வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் வெயிட்டு கைதான். மாஜி அமைச்சர் வேற, இந்த தொகுதியில் உள்ளடி வேலைகள் நடக்கும் என்பதால் தேர்தல் வேலையை கவனிக்க ஏ.வ வேலுவை தேர்தல் களத்தை கவனிக்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால், சூலூர் சட்டசபைத் தொகுதி அதிமுகவின் கோட்டை என்பதை நிரூபிக்கும் வகையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியோ ஸ்டாலின் தனக்கு கொடுக்கும் குடைச்சலுக்கு இந்த வெற்றியின் மூலம் பதிலடி கொடுக்கும் விதமாக, சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்று தனது தனது பலத்தை நிரூபிக்கும் முயற்சியில் களத்தில் தீயாக வேலை பார்த்து வருகிறார்.  

click me!