கருத்து மோதல்... தினகரனை கழற்றிவிட 2 எம்.எல்.ஏ.க்கள் திட்டம்..?

By vinoth kumarFirst Published May 5, 2019, 11:31 AM IST
Highlights

சபாநாயகர் நோட்டீசிக்கு எதிராக வழக்கு தொடர வேண்டாம் என டிடிவி.தினகரன் கூறியும் 2 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனால் டிடிவி.தினகனுக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் கருத்து மோதல் முற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சபாநாயகர் நோட்டீசிக்கு எதிராக வழக்கு தொடர வேண்டாம் என டிடிவி.தினகரன் கூறியும் 2 எம்.எல்.ஏ.க்கள் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர். இதனால் டிடிவி.தினகனுக்கும் இரண்டு எம்.எல்.ஏ.க்களுக்கும் கருத்து மோதல் முற்றியுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. 

இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு அறந்தாங்கி ரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு, விருதாச்சலம் கலைச்செல்வன் ஆகியோர் டிடிவி.தினகரனுக்கு ஆதரவான நிலைபாட்டில் இருந்து வருகின்றனர். இவர்கள் அமமுகவில் இணைந்து, அக்கட்சியில் பொறுப்புகள் பெற்றுள்ளதாக குற்றம்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக அரசு கொறடா ராஜேந்திரன், அமைச்சர் சி.வி. சண்முகம், சபாநாயகர் தனபால் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். ஆலோசனையின் முடிவில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து விளக்கம் அளிக்கக்கோரி 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பினார். இந்த நோட்டீசும் 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் சென்றடைந்தது.

இந்நிலையில் சபாநாயகர் நோட்டீசுக்கு எதிராக நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டாம் என 3 எம்.எல்.ஏக்களும் டிடிவி.தினகரன் உத்தரவிட்டிருந்தார். ஆனால் ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வன் ஆகிய இருவரும் தினகரனின் உத்தரவை மீறி சபாநாயகருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஆனால் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. பிரபு மட்டும் வழக்கு தொடரவில்லை. இது தொடர்பாக அவரிடம் விசாரித்த போது ரத்தினசபாபதி மற்றும் கலைச்செல்வனும் யார் கொடுத்த யோசனையில் நீதிமன்றத்தில் சென்றார்கள் என்று தெரியவில்லை. இருந்தாலும் நீதிமன்றம் எந்த உத்தரவு பிறப்பித்தாலும் எனக்கு பொருந்தும் என்றார். 

இதனிடையே டிடிவி.தினகரனின் பேச்சை மீறி 2 எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். இதனால், தினகரனுடன் ரத்தினசபாபதி, கலைச்செல்வன் ஆகிய 2 பேருக்கும் கருத்து மோதல் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!