மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மேற்கோள் காட்டி அமைபுகுந்த வீடு என திமுகவை விமர்சித்துள்ளார் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை மேற்கோள் காட்டி அமைபுகுந்த வீடு என திமுகவை விமர்சித்துள்ளார் மு.க.அழகிரி மகன் தயாநிதி அழகிரி.
தனது தந்தையை கட்சியில் சேர்த்துக் கொள்ளாத நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் திமுகவை டிவிட்டரின் விமர்சித்து திணறடித்து வருகிறார் தயாநிதி அழகிரி. தி.க. தலைவர் வீரமணியை ஓசிச் சோறு என அவர் விமர்சித்தது வைரலானது. இந்நிலையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தின் நம்பகத்தன்மை வாய்ந்த இந்த அரசியல்வாதி கோபால்சாமி, தேர்தலுக்குப் பின் மதிமுகவை திமுகவுடன் இணைத்தாலும் கூட ஆச்சர்யப்படுவதற்கில்லை’’ எனப்பதிவிட்டுள்ள அவர் ஹேஷ்டேக்கில் வைகோ பெயரையும் பதிவிட்டுள்ளார்.
அத்தோடு, வைகோவை குறிக்கும் விதமாக ட்விட்டின் கீழே ஒரு வீடு அதை நோக்கி ஒரு அம்புக்குறி அந்தப் பாதையில் ஓர் ஆமை என்று குறியீடும் பதிவிட்டுள்ளார். ஆமை புகுந்த வீடு உறுப்படாது என்கிற பழமொழியை சுட்டிக்காட்டும் விதமாக வைகோ திமுகவுக்குள் புகுந்தால் விளங்காது’ என கூறியிருக்கிறார் தயாநிதி அழகிரி. இந்த பதிவுக்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Don’t be surprised if the most credible politician 🤣 of TN, Gopalsamy merges his party MDMK with the DMK after the polls ..
🏠 ⬅️ 🐢
தேர்தல் நேரத்தில் தனது ஆதரவு யாருக்கு என விரஃஇவில் அறிவிப்பதாக மு.க.அழகிரி தெரிவித்து இருந்த நிலையில், தயாநிதியின் இந்த பதிவு திமுகவை வெறுப்பேற்றி உள்ளது.