மாதம் தோறும் வங்கிக்கணக்கில் ரூ.1,500 - நீட் தேர்வு ரத்து... அதிமுக தேர்தல் அறிக்கையில் அதிரடி..!

By vinoth kumarFirst Published Mar 19, 2019, 11:49 AM IST
Highlights

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையில் பல அதிரடி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

மக்களவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை ராயப்பேட்டை தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓபிஎஸ் ஆகியோர் வெளியிட்டுள்ளனர். இந்த தேர்தல் அறிக்கையில் பல அதிரடி அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

தமிழகத்தில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து கட்சியினர் வேட்பாளர் அறிவித்த நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியது. இந்த தேர்தல் பிரசாரத்தில் தேர்தல் அறிக்கை முக்கிய துருப்புச் சீட்டாக இருக்கும். எனவே, வாக்காளர்களை கவரும் வகையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையை தயாரித்துள்ளன. அந்த வகையில் அதிமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

 

* வறுமை கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மாதாந்திர நேரடி உதவி தொகையாக ரூ.1,500 வழங்க வலியுறுத்தப்படும்.

* இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற எம்ஜிஆர் பெயரில் திறன் மேம்பாட்டு திட்டம் கொண்டுவரப்படும்.

* அம்மா தேசிய வறுமை ஒழிப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்தப்படும். 

* காவிரி, கோதாவரி இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்துவோம்

* வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பகுதிகளுக்கு நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும்.

* வீணாகும் தண்ணீரை பாசனம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்த புதிய திட்டம். 

* நீட் தேர்வை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

* கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

* மாணவர்களின் கல்வி கடன்களை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* விவசாய கடன் சுமையை நீக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்.

* தமிழகத்தில் 3 புதிய நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

* பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய ஆளுநருக்கு உத்தரவிடுமாறு குடியரசுத் தலைவரிடம் அதிமுக வலியுறுத்தும்.

* தமிழ் மொழியை மத்திய அரசின்  அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

* தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்கு இட ஒதுக்கீடு.

* புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு முழு மாநில அந்தஸ்து வழங்க மத்திய அரசை அதிமுக வலியுறுத்தும்.

* பொதுசிவில் சட்டத்தை செயல்படுத்தும் எந்த முயற்சிலும் ஈடுபடக் கூடாது என மத்திய அரசை  வலியுறுத்துவோம்.

* மதம் மாறினாலும் சாதிரீதியான இடஒதுக்கீடு பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்கப்படு்ம்.

click me!