2014 -க்கு அப்புறம் திமுக ஜெயிக்கல... திமுக அதிமுக ஒப்பந்த அடிப்படையில் கூட்டணி வச்சிருக்காங்க! பகீர் கிளப்பும் அழகிரி

By sathish kFirst Published Aug 25, 2018, 5:38 PM IST
Highlights

திமுக மற்றும் அதிமுக ஒப்பந்த  அடிப்படையில் கூட்டணியில் உள்ளனர் என மீண்டும் திமுக நிர்வாகிகளை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

மதுரையில் அவர் ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில் தி.மு.க தொண்டர்களும், அவரது ஆதரவாளர்களும் வந்த குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதனை எதிர்பார்த்து மதுரையில் அழகிரி வீடு அமைந்திருக்கும் டி.வி.எஸ் நகர் பகுதியில் காலை முதலே பரபரப்பு காணப்பட்டது. மேலும் ஆதரவாளர்களை அழகிரி சந்திப்பதற்காக பிரமாண்ட சாமியான பந்தல் மற்றும் ஏராளமான சேர்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டிருந்தன.  

அழகிரி ஏற்பாடு செய்திருந்த ஆலோசனை கூட்டத்தில் மதுரையில் இருந்து தி.மு.கவின் ஒரு வார்டு பிரதிநிதி கூட  பங்கேற்கவில்லை. மன்னனும், கோபியும் தங்களுடன் சுற்றிக் கொண்டிருக்கும் சிலர் மூலமாக ஒரு 200 அல்லது 300 பேரை அங்கு அழைத்து வந்திருந்தனர்.  கூட்டம் குறைவாக இருந்த காரணத்தினல் சுமார் 1 மணி நேரத்திலேயே கூட்டம் முடிந்துவிட்டது. மதுரையிலேயே 500 பேரை கூட கூட்ட முடியாத அழகிரி சென்னையில் எப்படி ஒரு லட்சம் பேரை கூட்டுவார் என திமுகவினர் கலாய்த்து வருகின்றனர். இன்றும்  இரண்டாவது நாளாக ஆலோசனையில் ஈடுபட்டுவருகிறார். 

இதனையடுத்து இன்று செய்தியாளர்களை சந்தித்த அழகிரி கலைஞரும் அண்ணாவும் உருவாக்கிய இந்த தாய் கழகமான திமுகவில் நான்  இணைவதில் என்ன தவறு இருக்கிறது?  

கலைஞரும் அண்ணாவும் உருவாக்கிய இந்த  தாய் கழகமான திமுகவில் நான்  இணைவதில் என்ன தவறு இருக்கிறது. செப்டம்பர்.5 ல் நடக்கும் அமைதி பேரணிக்கு பின்பு மக்கள் என்னை எப்படி ஏற்றுகொள்கிறார்கள் என்று பாருங்கள். 

சுப்பிரமணியசாமியின் அழகிரி பற்றிய கருத்துக்கு கேள்வி கேட்ட போது என் மகனே அழகாக பதில் சொல்லியுள்ளார்.சுப்பிரமணிய சுவாமி ஒரு மனநோயாளி அவர் கருத்துக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை. அதையே தான் நானும்  கூறுகிறேன்.

5ம் தேதி பேரணிக்கு பிறகு திமுக விற்க்கு பெரிய ஆபத்து ஏற்படும். பேரணியில் ஒரு லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்வார்கள். தலைவர் பொறுப்பை அவசர அவசரமாக ஸ்டாலின் பொறுப்பை ஏற்க உள்ளார். திமுகவில் நான் தற்போது இல்லை என்பதால்  வேறு கருத்து சொல்ல விரும்பவில்லை. 2014 தேர்தலுக்கு பிறகு இதுவரை எந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெறவில்லை.

திருமங்கலம் பார்மலா என்றால் என்ன என்று வருவாய்துறை அமைச்சரிடமே கேட்டு சொல்லுங்கள். இது வருவாய் துறை அல்ல இது கட்சி அது தெரியாமல் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உளருகிறார். மேலும் பேசிய அழகிரி  திமுக மற்றும் அதிமுக ஒப்பந்த  அடிப்படையில் கூட்டணியில் உள்ளனர். என்று தெரிவித்தார்.

click me!