புதிய கட்சி ஆரம்பிக்கப்போகும் மு.க.அழகிரி... உள்ளூர ரசிக்கும் கனிமொழி..?

By Thiraviaraj RMFirst Published Dec 26, 2020, 11:15 AM IST
Highlights

உதயநிதி டார்ச்சரால் நொந்து நூலாய் போயிருக்கும் கனிமொழி, இப்போது மு.க.அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதை ஜாலியாக வேடிக்கை பார்க்கிறார் என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

உதயநிதி டார்ச்சரால் நொந்து நூலாய் போயிருக்கும் கனிமொழி, இப்போது மு.க.அழகிரி புதிய கட்சி ஆரம்பிக்கப்போவதை ஜாலியாக வேடிக்கை பார்க்கிறார் என்று தி.மு.க.வினர் குற்றம் சாட்டுகின்றனர்.

கருணாநிதியால் தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர் மு.க.அழகிரி. கட்சிக்கு ஒருவர் போதும் என்ற முடிவில் இந்த முடிவுக்கு கருணாநிதி வந்தார். ஆனாலும், கருணாநிதி உயிரோடு இருக்கும் வரை தி.மு.க.வில் சேர்வதற்கு எவ்வளவோ முயற்சிகளை அழகிரி எடுத்தார். ஆனால், எதுவும் நடக்கவே இல்லை.கருணாநிதி மறைவுக்குப் பிறகு மீண்டும் திமுகவில் சேர நினைத்தார். பல்வேறு பேச்சுவார்த்தைகள் போனதே தவிர, அழகிரியின் ஆசை நிறைவேறவில்லை. தன்னுடைய மகனுக்கு மட்டுமாவது ஒரு பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டார் அதற்கும் ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை.

அதனால், இப்போது வேறு வழியே இல்லாமல் கட்சி ஆரம்பிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார். இதுகுறித்து இன்று கடிதம் வெளியிட்டுள்ள அழகிரி, ‘’வருங்கால நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த் கூட்டம் 3.1.2021 ஞாயிறு அன்று மதுரை பாண்டிகோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெற உள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில் அழகிரி கட்சி ஆரம்பிப்பதற்கு கனிமொழி மறைமுக ஆதரவு கொடுப்பதாக சொல்லப்படுகிறது.

 அதனால்தான் அழகிரி கட்சி தொடங்குவது குறித்து கனிமொழியிடம் கேட்கப்பட்டதற்கு, “ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மு.க.அழகிரி உட்பட யார் கட்சி ஆரம்பித்தாலும் திமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்காது. திமுகவின் வெற்றி வாய்ப்பை யாராலும் பறிக்க முடியாது. ஏனெனில் அதிமுக ஆட்சி முடிவுக்கு வர வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கின்றனர்” என்று கூறி இருக்கிறார். ஆதரவு உண்டு அல்லது இல்லை என்று தெரிவிக்காமல் சுற்றிவளைத்து பேசியது ஸ்டாலினை யோசிக்க வைத்திருக்கிறதாம். 

click me!