வந்தது ‘வெறும் 16 ஆயிரமே! கூட வந்ததும் ’பெய்டு உறுப்பினர்களே’! திருப்பூராவது தேறுமா? சோகத்தின் உச்சத்தில் அழகிரி...

Published : Sep 11, 2018, 01:41 PM ISTUpdated : Sep 19, 2018, 09:22 AM IST
வந்தது ‘வெறும்  16 ஆயிரமே! கூட வந்ததும் ’பெய்டு உறுப்பினர்களே’! திருப்பூராவது தேறுமா?  சோகத்தின் உச்சத்தில் அழகிரி...

சுருக்கம்

தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என அடம்பிடிக்கும் ஸ்டாலினுக்கு எதிராக என்னென்னவோ செய்து தி.மு.க.வினுள் மீண்டும் நுழைய தலைகீழாய் நிற்கிறார் அழகிரி.

தன்னை கட்சியில் சேர்த்துக் கொள்ள முடியாது என அடம்பிடிக்கும் ஸ்டாலினுக்கு எதிராக என்னென்னவோ செய்து தி.மு.க.வினுள் மீண்டும் நுழைய தலைகீழாய் நிற்கிறார் அழகிரி. லேட்டஸ்டாய் அழகிரி எடுத்திருக்கும் அஸ்திரம் ’முப்பெரும் விழா’! இது தேறுமா? என்பதுதான் அவரை நம்பி களமிறங்கும் நபர்களின் கேள்வியே. 

கருணாநிதி இறந்த முப்பதாவது நாளன்று சென்னையில் அழகிரி நடத்திய ‘அமைதிப் பேரணி’ அப்படியொன்றும் அதிர்வை கிளப்பாமல் அடங்கிப் போனது. ’என்னுடன் ஒன்றரை லட்சம் பேர் வந்தார்கள்’ என்றார் அவர். ஆனால் உளவுத்துறை போலீஸோ ‘வெறும் பதினைந்தாயிரமே’ என்றது. கூடியிருந்த கூட்டமும் ’பெய்டு உறுப்பினர்களே’ என்று சில மீடியாக்கள் பேட்டியோடு முகத்திரை உரித்துக் காட்டின. 

அமைதிப்பேரணிக்கு அடுத்து ஒரு கேள்வியுமில்லையே, என்னதான் செய்யலாம்? என்று நொந்து கிடந்தார் அழகிரி. அவரது கோட்டை என்று வர்ணிக்கப்படும் தென் தமிழகத்திலிருந்து ஒரு குருவி கூட அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி எந்த  விஷயத்தையும் அவரிடம் முன்னெடுக்கவில்லை. இந்நிலையில், அழகிரிக்கு அடித்தளமே இல்லாத கொங்கு மண்டலத்திலிருந்து அவருக்கு ஒருவர் போன் போட, கபாலென்று அவரை அமுத்தியிருக்கிறார் அழகிரி. 

தி.மு.க.விலிருந்து சமீபத்தில் கட்டம் கட்டப்பட்டவர் திருப்பூர் மாநகர் மாவட்டத்தின் முன்னாள் பொருளாளரான கார்த்திக். விசாரிக்காமல், கொள்ளாமல் தன் மீது ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின் மீது கடும் கடுப்பில் இருந்தவர் அவரிடம் நியாயம் கேட்டு கடிதமெல்லாம் எழுதிப் பார்த்தாராம். 

ஆனால் வேலைக்கு ஆகவில்லை. இதனால் பெரும் கடுப்பிற்கு ஆளானவர், அழகிரியின் பின்னால் போய் நிற்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் இப்போது. 

இவரது ஏற்பாட்டின்படி வரும் 30-ம் தேதியன்று திருப்பூர் சிட்டியில் முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தை அழகிரியின் தலைமையில் நடத்த இருக்கிறாராம். அதன் பிறகு அந்த மாவட்டம் முழுக்க அறுபது இடங்களில் அழகிரி அணி சார்பாக நிகழ்வுகளை நடத்த இருக்கிறாராம். 

இந்த நிகழ்ச்சியின் மூலம் தனக்கு பெரிய பூஸ்ட் கிடைக்குமென்று இப்போதே கனவில் கரைய துவங்கியிருக்கிறார் அழகிரி. 

ஆனால் ஸ்டாலின் டீமோ இந்த மூவ்களை கண்டு விழுந்து விழுந்து சிரிக்கிறது. ’அழகிரிக்காக முப்பெரும் விழா நடத்தப்போறேன்னு சீன் போட்டிருக்கிற இந்த கார்த்தி பல விமர்சனங்கள்,  பிரச்னைகளால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர். இவருக்கு பின்னாடி அஞ்சாறு பேர் கூட இல்லாத நிலையில், எந்த தைரியத்தில் முப்பெரும் விழா நடத்துறேன்னு பில்ட் அப் கொடுக்கிறாரோ தெரியலை. 

லோக்கல் மாவட்ட செயலாளர் செல்வராஜ் மற்றும் தலைவர் ஸ்டாலின் மேலே தனக்கு இருக்கிற ஆதங்கத்துக்கு வடிகாலா அழகிரியை தெருவுல இழுத்துவிட்டு வேடிக்கை காட்ட இருக்கிறார். இதுல அய்யோ பாவமாகப்போவது அழகிரிதான். இருக்கிற கொஞ்ச நஞ்ச மரியாதையும் திருப்பூர்ல கரைய போவுது. 

முப்பெரும் விழாங்கிற பெயர்ல திட்டமிடப்படுற இந்த விழா நடக்குமாங்கிறதே டவுட்டு. ஒருவேளை நடந்தாலும் அதுல கழக ஆளுங்க யாராச்சும் கலந்துகிட்டா, அவங்களை கட்சியில இருந்து உடனே தூக்கி எறிஞ்சுடுவார் தலைவர்.” என்று நாக்கு துருத்தி இருக்கிறார்கள். 

இதையேல்லாம் ஸ்மெல் பண்ணிவிட்ட அஞ்சாநெஞ்சர், இந்த முப்பெரும் விழா தேறுமா? தேறாதா! எனும் சோகத்தில் இருக்கிறார். ஆனாலும் அழகிரி நிலை இம்புட்டு மோசமாகி இருக்க வேண்டாம்!

PREV
click me!

Recommended Stories

ஈரோட்டில் செம்ம மாஸ் காட்டும் செங்கோட்டையன்..! மாநாட்டை மிரட்டி காட்டப் போவதாக ஆவேசம்
234 தொகுதிகளுக்கும் விருப்பமனு..! முதல் கட்சியாக அறிவிப்பு வெளியிட்ட காங்கிரஸ்..