காணாமல் போன அழகிரி!...காரணம் என்ன?

Published : Aug 08, 2018, 02:07 PM ISTUpdated : Aug 08, 2018, 02:17 PM IST
காணாமல் போன அழகிரி!...காரணம் என்ன?

சுருக்கம்

திரைத்துறை மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் கலைஞர் அவர்களின் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நேற்று மாலை கலைஞர் கருணாநிதி அவர்களின் உயிர் காவேரி மருத்துவனையில் பிரிந்தது. இதனை தொடர்ந்து அவருடைய உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து கோபாலபுரத்தில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டுசெல்ல பட்டது. தொண்டர்கள் அனைவரும் கண்ணீர் மல்க கலைஞரின் வாகனத்தின் பின் சென்றனர்.

இன்று காலை கலைஞர் கருணாநிதி அவர்களின் உடல் ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது. திரைத்துறை மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும் கலைஞர் அவர்களின் உடலை நேரில் பார்த்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும், தமிழக அரசு கலைஞர் கருணாநிதி அவர்களை மெரினாவில் புதைக்க இடம் தர மறுத்ததை தொடர்ந்து, திமுக நேற்று இரவு தொடர்ந்த வழக்கிற்கு இன்று சாதகமான தீர்ப்பு கிடைத்தது. தீர்ப்பு வந்த அடுத்த நிமிடம் அங்கிருந்த தொண்டர்கள் ஆரவாரம் செய்தனர். ஸ்டாலின், துரைமுருகனை கட்டியணைத்து அழுது ஆனந்த கண்ணீரை வடித்தார். அப்பொழுது கனிமொழி அருகில் இருந்தார். 

ஆனால், கலைஞர் அவர்களின் மூத்த மகனான அழகிரி காலையில் இருந்து அந்த இடத்தில் காணப்படாமலேயே இருக்கிறார். இது குறித்த காரணமென்ன என விசாரித்த பொழுது, அவர் உடல் நலம் சரியில்லாமல் இருப்பதாகவும், அதனால் தான் அந்த இடத்திற்கு வாராமல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று வரை அடிக்கடி மருத்துவமனை வந்து சென்ற அழகிரி இன்று வராமல் இருப்பது பலருக்கும் சந்தேகத்தினை அளிக்கின்றது.

PREV
click me!

Recommended Stories

பாஜக வெற்றி..! மதச்சார்பின்மையை நம்புபவர்களுக்கு கவலை அளிக்கிறது.. பினராயி விஜயன் கடும் வேதனை..!
தற்குறி.. ஒத்தைக்கு ஒத்தை வாடா.... தரை லோக்கலா அடித்து கொள்ளும் சாட்டை - நாஞ்சில் சம்பத்