
திமுக தலைவர் கருணாநிதியின் உடலை நல்லடக்கம் செய்ய, திமுக தரப்பினர் கேட்டுக்கொண்டவாறே மெரினாவில், அண்ணா சமாதிக்கு பின்புறம் இடம் ஒதுக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வயது மூப்பு காரணமாக நேற்று மாலை கருணாநிதி காலமானார் என காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதனை தொடர்ந்து நல்லடக்கம் செய்ய மெரினாவில் இடம் வேண்டும் என தமிழக முதல்வரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார் ஸ்டாலின்.
கிண்டியில் கருணாநிதியை அடக்கம் செய்தால் அது ஒரு கண்ணியமாக இருக்காது. இறந்தவரின் உரிமையை பறிக்கும் செயலாக இருக்கும், கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின் படி கட்டிடம் புதிதாக எழுப்ப மட்டுமே அனுமதி தேவை. நாங்கள் கேட்பது அண்ணா சமாதியின் உள்ளே அடக்கம் செய்ய மட்டுமே, 1988 ஆம் ஆண்டு அடக்கம் செய்யும் இடமாக அண்ணா சமாதி அறிவிக்கப்பட்டுள்ளது, அண்ணா சமாதி வளாகத்தில் உடலை அடக்கம் செய்ய மட்டுமே அனுமதி கோருகிறோம்
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை ஒதுக்க மத்திய அரசின் அனுமதி தேவையில்லை, கலைஞரின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய அனுமதிப்பதில் சட்ட சிக்கல் உள்ளது என்று மட்டுமே அரசு நேற்று மனுவில் தெரிவித்திருந்தது என குறிப்பிட்டு காட்டியது திமுக.
அதன்பின், தொடர்ந்து நடைப்பெற்ற வழக்கு விசாரணையில், மெரினாவில் இடம் ஒதுக்க முட்டுக்கட்டையாக இருந்த 5 வழக்குகளும் நேற்று ஒரே நாளில் ஒரே நேரத்தில் தள்ளுபடி ஆகிவிட்ட நிலையில், தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்கி உயர்நீதிமன்றம் உத்திரவிட்ட்டது.
அதற்கிடையில்,
வன்முறை வேண்டாம்...தொண்டர்களிடம் கடிந்து கூறிய ஸ்டாலின்
மெரினாவில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முடியாதா என கொதித்து எழுந்த தொண்டர்களுக்கு ஸ்டாலின், "வன்முறை கூடாது....சட்டத்தின் மூலம் தான் தீர்வு...யாரும் வன்முறையில் ஈடுபட கூடாது" என்று ஸ்ட்ரிக்ட்டா கூறி விட்டார். எப்போதும் பொறுமையான போக்கை கடைப்பிடிக்கும் ஸ்டாலின், திமுக தலைவரும், தன் தந்தையுமான கருணாநிதியின் மறைவிலும் பொறுமை காத்து, சட்டத்தின் மூலமாக வென்று விட்டார் ஸ்டாலின்.
இதன் மூலம், தான் அரசியலில் ஒரு முதிர்ந்த தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் ஸ்டாலின். மேலும், திமுக எம்எல்ஏ ஜெ. அன்பழகன், தொண்டர்களுடன் பேரணியாக சென்று முதல்வர் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.
ஆனால் ஸ்டாலின் ஒரு தலைவராக இப்படி ஒரு துக்கத்திலும் தானும் பொறுமை காத்து, கட்சியின் முக்கிய உறுப்பினர்களையும் தொண்டர்களையும் பொறுமை காத்திட வைத்து, திமுக விருப்பப்படியே கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.